ChatGPT-ல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படையான வழிகாட்டி

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 17 மார்ச் 2026 09:52 IST
ஹைலைட்ஸ்
  • history: உரையாடல்களின் தொடர்ச்சிக்காக சேவையை மேம்படுத்துவதற்காக பயன்படுத்
  • Chat பெயரின் மீது hover செய்யவும் வரும் three-dot menu (⋮)-ஐ கிளிக் செய்ய
  • Chat-ஐ Archive செய்வது எப்படி?, Archive செய்வது delete செய்வதைப் போல இல்ல

ChatGPT lets you archive chats to de-clutter the active history

Photo Credit: Gadgets

ChatGPT இன்று பலருக்கும் முக்கியமான கருவியாக உள்ளது. சிலர் இதைப் பயன்படுத்தி புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள், சிலர் சாதாரண உரையாடல்களுக்கு பயன்படுத்துகிறார்கள், மற்றவர்கள் வேலை மற்றும் உற்பத்தித் திறனுக்காக பயன்படுத்துகிறார்கள். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் போது தனியுரிமை (Privacy) தொடர்பான கவலைகள் இருக்கலாம். குறிப்பாக, சில உரையாடல்கள் ரகசியமான தகவல்களை கொண்டிருக்கலாம்.

இந்த சூழலில், உங்கள் chats-ஐ நிர்வகிக்க இரண்டு முக்கிய வழிகள் உள்ளன: Delete (நிரந்தரமாக நீக்குதல்), Archive (மறைத்து வைத்தல்)

ChatGPT-ல் Chat History என்றால் என்ன?

Chat History என்பது நீங்கள் முன்பு செய்த உரையாடல்கள் பட்டியல் ஆகும். ஒவ்வொரு புதிய உரையாடலும் ஒரு session ஆக சேமிக்கப்படும். அது sidebar-ல் காணப்படும். நீங்கள் அதை நீக்கவோ அல்லது archive செய்யவோ செய்யும் வரை அது அங்கே இருக்கும். OpenAI கூறுவதுபடி, இந்த history: உரையாடல்களின் தொடர்ச்சிக்காக சேவையை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

Chat-ஐ Delete செய்வது எப்படி?

ஒரு chat-ஐ delete செய்தால் அது முழுமையாக நீக்கப்படும்.
அதை மீண்டும் பெற முடியாது. Website-ல் Delete செய்வது: ChatGPT-ஐ திறந்து login செய்யவும், Sidebar-ல் நீக்க வேண்டிய chat-ஐ கண்டுபிடிக்கவும் Chat பெயரின் மீது hover செய்யவும் வரும் three-dot menu (⋮)-ஐ கிளிக் செய்யவும். Delete என்பதை தேர்வு செய்யவும் Confirm செய்யவும், அந்த chat உடனே நீக்கப்படும். 

Mobile App-ல் Delete செய்வது: 

ChatGPT app-ஐ திறக்கவும், Chat list-ல் conversation-ஐ கண்டுபிடிக்கவும். அதை tap & hold செய்யவும் அல்லது options menu திறக்கவும், Delete தேர்வு செய்யவும, Confirm செய்யவும், Chat-ஐ Archive செய்வது எப்படி?, Archive செய்வது delete செய்வதைப் போல இல்லை. இது chat-ஐ நீக்காது, அது main list-இல் இருந்து மறைக்கப்படும், பின்னர் archive பகுதியில் இருந்து மீண்டும் பார்க்கலாம். 

Website-ல் Archive செய்வது:

Sidebar-ல் chat-ஐ கண்டுபிடிக்கவும், Chat பெயரின் மீது hover செய்யவும், three-dot menu-ஐ கிளிக் செய்யவும், Archive தேர்வு செய்யவும், Chat main list-இல் இருந்து மறையும், Mobile App-ல் Archive செய்வது: ChatGPT app திறக்கவும், Archive செய்ய வேண்டிய chat-ஐ தேர்வு செய்யவும், Options menu திறக்கவும், Archive தேர்வு செய்யவும், தேவையான போது அதை மீண்டும் restore செய்யலாம்.

Temporary Chats (தற்காலிக உரையாடல்கள்)

இன்னொரு முக்கிய அம்சம்: Temporary Chats, புதிய chat page-ல் மேல் வலது மூலையில் இருக்கும் chat icon-ஐ அழுத்தவும், இது temporary mode-ஐ செயல்படுத்தும். இதன் சிறப்புகள்: Chat தானாகவே delete ஆகும், எந்த தகவலும் சேமிக்கப்படாது, உங்கள் preferences அல்லது memory சேமிக்கப்படாது.

முடிவு: Delete, Archive, மற்றும் Temporary Chats ஆகியவற்றை சரியாக பயன்படுத்தினால்: உங்கள் privacy பாதுகாக்கப்படும், Chat list சுத்தமாக இருக்கும், தேவையான உரையாடல்களை மட்டும் சேமிக்கலாம், உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப சரியான முறையை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: ChatGPT, techonology
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் ரெட்மி டர்போ 5 இன்று அறிமுகம்: இதன் விலை, தனித்துவமான வசதிகள் மற்றும் முழு விபரங்கள்
  2. ஹவாய் ஃப்ரீபட்ஸ் 7i, SE 4 இயர்போன்களின் இந்திய அறிமுக விபரம் வெளியானது
  3. ஐபோனில் வாட்ஸ்அப்பில் பல கணக்குகளை உருவாக்குவது மற்றும் நீக்குவது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  4. வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கான குரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை வாட்ஸ்அப் சோதிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்
  5. விவோ V70 மற்றும் Y சீரிஸ் போன்களின் விலை இந்தியாவில் உயர்வு
  6. ஒன்பிளஸ் N6 இந்தியாவின் அறிமுக தேதி, விலை வரம்பு மற்றும் வடிவமைப்புடன் வெளியிடப்பட்டது
  7. HMD Vibe 2 5G புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்: விலை, விற்பனைத் தேதி, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
  8. அமேசான் சேலில் அசுஸ் விவோபுக் எஸ்16, சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மற்றும் பல சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி!
  9. பிளிப்கார்ட் சலுகை: ஒப்போ Find X9 Ultra போனுக்கு ₹17,000 அதிரடி விலை குறைப்பு!
  10. ரியல்மி P4R 5G vs ஒன்பிளஸ் நோர்ட் CE 6 லைட் vs போகோ M8 5G : சிறந்த பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன் ஒப்பீடு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.