5,000mAh பேட்டரி, டிரிபிள் ரியர் கேமரா போன்ற பல சிறப்பம்சங்களுடன் வெளியானது Vivo Z5i !

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 நவம்பர் 2019 17:30 IST
ஹைலைட்ஸ்
  • Vivo Z5i ஒரே 8GB RAM + 128GB ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது
  • Vivo U3-க்கு இணையாக, புதிய Vivo போனில் Snapdragon 675 SoC உள்ளது
  • Vivo Z5i ஏற்கனவே சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது

Vivo Z5i, 6.53-inch full-HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது

Vivo Z5i-ஐ சீன நிறுவனத்தால் Z-சீரிஸில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Vivo Z5i-ஐப் போலவே இருக்கும் புதிய ஸ்மார்ட்போன், Vivo U3-ஐப் போன்ற விவரக்குறிப்புகளின் பட்டியலுடன் வருகிறது. 


Vivo Z5i-யின் விலை:

Vivo Z5i-யின் ஒரே 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 1,798 (சுமார் ரூ. 18,300)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Jade Blue மற்றும் Onyx Black வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும், Vivo online store மூலம் சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இருப்பினும், Vivo Z5i-யின் உலகளாவிய வெளியீடு குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

நினைவுகூர, Vivo U3-யின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 999 (சுமார் ரூ. 10,200) விலையுடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேசமயம் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 1,199 (சுமார் ரூ. 12,100)-யாக விலையிடப்படுள்ளது. மேலும், இந்தியாவில் Vivo U20-யானது ரூ. 10,990-க்கு அறிமுகமானது.


Vivo Z5i-யின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Vivo Z5i, Funtouch OS 9.2 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 19.5:9 aspect ratio மற்றும் 90.30 percent screen-to-body ratio உடன் 6.53-inch full-HD+ (1080x2340 pixels) TFT LTPS டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 8GB RAM உடன் இணைக்கப்பட்டு Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது.

Advertisement

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Vivo Z5i-யில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் f/1.78 lens உடன் 16-megapixel முதன்மை சென்சார் மற்றும் f/2.2 lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் f/2.4 macro lens உடன் 2-megapixel மூன்றாம் நிலை சென்சாரையும் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, முன்பக்கத்தில்  f/2.0 aperture உடன் 16-megapixel shooter உள்ளது.

Vivo Z5i, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இது microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கக்கூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகிய சென்சார்கள் அடங்கும். இந்த போனில் rear-mounted fingerprint சென்சாரும் உள்ளது.

விவோ, Z5i-யில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை வழங்குகிறது. இறுதியாக, இந்த ஸ்மார்ட்போன் 162.15x76.47x8.89mm அளவீட்டையும், 193 கிராம் எடையையும் கொண்டதாகும்.

Advertisement
 
KEY SPECS
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo Z5i price, Vivo Z5i specifications, Vivo Z5i, Vivo U3, Vivo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.