இந்தியாவில் விவோ y83 ப்ரோவின் விலை குறைப்பு!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 15 நவம்பர் 2018 20:14 IST
ஹைலைட்ஸ்
  • விவோ y83 ப்ரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை ரூ.15,990 ஆ
  • தற்போது அதன் விலையில் ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.
  • விவோ y83 ப்ரோவின் இப்போதைய விலை ரூ. 14,990 ஆகும்.

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் விவோ y83 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வருடம், ஆகஸ்ட் மாதத்தில் விவோ y83 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை ரூ.15,990 ஆகும். தற்போது அதன் விலை ரூ.14,990 ஆக குறைந்துள்ளது. விவோ y83 ப்ரோவில் 4ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு திறன், டிஸ்பிளே நாட்ச் மற்றும் பின்பக்கம் இரு கேமிராவைக் கொண்டுள்ளது. இதன் விலையில் தற்போது ரூ.1000 குறைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனாது ஜூன் மாதம் வெளியான விவோ ஒய்83ன் மேம்படுத்தப்பட்ட வேரியண்ட் ஆகும். அதன் விலை ரூ.13,990 ஆகும்.

விவோ y83 ப்ரோ வேரியண்டின் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளதை கேட்ஜெட்ஸ் 360 உறுதி செய்துள்ளது. அமேசானில் விவோ y83 ப்ரோவின் பழைய விலை மாற்றப்பட்டு புதிய விலையில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் இதுவரை பழைய விலையை மாற்றவில்லை. இருப்பினும் விரைவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ y83 ப்ரோவின் முக்கியம்சங்கள்:

இந்த ஸ்மார்போனில் இரட்டை சிம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். விவோ ஒய்83 ப்ரோ funtouch OS 4.0ல் இயங்குகிறது. இதிலிருக்கும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆகும். 6.22 இன்ச் ஹெச்டி+ full view 2.0 IPS உடன் திரை வீதம் 19:9 என்றளவில் இருக்கும். இதன் ப்ராசஸர் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ - கோர் ஆகும். விவோ y83 ப்ரோவில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமிரா உள்ளது. 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டது. 3260 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo Y83 Pro, Vivo Y83 Pro Price in India, Vivo Y83 Pro Specifications
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.