சின்ன ஃபோன் பிரியர்களுக்கு Vivo-வின் சர்ப்ரைஸ்! Vivo S50 Pro Mini-இல் Dimensity 9400 சிப்செட்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 28 அக்டோபர் 2025 07:30 IST
ஹைலைட்ஸ்
  • Vivo S50 சீரிஸ் நவம்பர் மாதம் சீனாவில் அறிமுகமாக அதிக வாய்ப்பு
  • Vivo S50 மற்றும் S50 Pro Mini இரண்டிலுமே Periscope Telephoto லென்ஸ் வசதி
  • S50 Pro Mini மாடல் 6.31 இன்ச் சிறிய திரையுடன் Dimensity 9400 சிப்செட் சக்

Photo Credit: Vivo

நாம இப்போ பார்க்கப்போறது Vivo நிறுவனத்துடைய புதிய கேமரா ஃபோன் சீரிஸ் பத்திதான். Vivo, தங்களோட S-சீரிஸ் ஃபோன்களை மேம்படுத்தி, Vivo S50 மற்றும் Vivo S50 Pro Miniங்கிற ரெண்டு மாடல்களை அடுத்த மாதம் அதாவது நவம்பரில் சீனாவில் லான்ச் பண்ணத் தயாராகிட்டாங்க. இந்த லான்ச்சுக்கு முன்னாடியே, ஃபோனோட கேமரா, டிஸ்ப்ளே (Display) உள்ளிட்ட பல அம்சங்கள் இப்போ ஆன்லைன்ல கசிந்து ஒரு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

S40-ஐ ஸ்கிப் செய்தது ஏன்?

முதல்ல ஒரு சுவாரஸ்யமான விஷயம்! Vivo நிறுவனம் ஏன் S40 மாடலைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக S50-க்கு வந்தாங்கன்னா, சீன கலாச்சாரத்துல நம்பர் 4 துரதிர்ஷ்டமானதாகக் கருதப்படுவதுதான் காரணம்னு சொல்லப்படுது. கேமராதான் பெரிய ஹைலைட் (Highlight): இந்த இரண்டு ஃபோன்களிலும் மிக முக்கியமான அம்சம் கேமராதான்.

  • பெரிஸ்கோப் லென்ஸ்: Vivo S50 மாடலில் ஃப்ளாக்‌ஷிப் (Flagship) தரத்திலான சென்சார் (Sensor) கொண்ட Periscope Telephoto லென்ஸ் இடம்பெறும்னு உறுதியா சொல்லப்படுது. இது தூரத்துல இருக்கிற பொருட்களைக் கூட தெளிவாக ஜூம் (Zoom) செய்து போட்டோ எடுக்க உதவும்.
  • செஃல்ஃபி கேமரா: இந்த சீரிஸில் வரப்போகும் இரண்டு ஃபோன்களிலும் 50 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா கொடுக்கப்படலாம். செல்ஃபி பிரியர்களுக்கு இது ஒரு நல்ல நியூஸ்.

இரண்டு மாடல்களின் டிஸ்ப்ளே (Display) விவரங்கள்:

  • Vivo S50 சீரிஸில் இரண்டு வெவ்வேறு சைஸ் (Size) ஃபோன்கள் வருது.
  • Vivo S50: இதில் 6.59 இன்ச் அளவுள்ள தட்டையான (Flat) டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் இருக்கும். ஃபோனைச் சுற்றி உறுதியான மெட்டல் (Metal) ஃபிரேம் (Frame) இருக்கலாம்.
  • Vivo S50 Pro Mini: இப்போ டிரெண்டில் இருக்கும் சின்ன சைஸ் ஃபோன் பிரியர்களுக்காக, இந்த மாடல் வெறும் 6.31 இன்ச் அளவுள்ள 1.5K AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. சிறிய சைஸ் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸ் (Choice).

சிப்செட் பவர் (Chipset Power):

S50 Pro Mini மாடலில் MediaTek Dimensity 9400 சிப்செட் இடம்பெறலாம்னு தகவல்கள் சொல்லுது. இது ஒரு ஃப்ளாக்‌ஷிப் லெவல் (Flagship Level) சிப்செட் என்பதால், காம்பாக்ட் (Compact) சைஸில் ஒரு பவர்ஃபுல் (Powerful) ஃபோனை எதிர்பார்க்கலாம். இரண்டு ஃபோன்களிலுமே Ultrasonic In-screen Fingerprint Sensor இருக்கலாம்னு சொல்லப்படுது.
Vivo S50 சீரிஸ் நவம்பரில் லான்ச் ஆனாலும், இது இந்தியாவுக்கு எப்போ வரும், என்ன விலையில் வரும்னு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகல. இருந்தாலும், இந்த அம்சங்களைப் பார்க்கும்போது, Vivo S50 சீரிஸ் கேமரா மற்றும் பெர்ஃபார்மன்ஸ்ல ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு தெரியுது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo S50, Vivo, S50 Pro Mini

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுக தேதி கசிந்தது; ரெட்மி 17 5G போனுடன் வரக்கூடும்
  2. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் X9s இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன
  3. மே 29 அறிமுகத்திற்கு முன்னதாக விவோ தனது முதல் ஓவர்-இயர் ANC ஹெட்போன்களை டீஸ் செய்துள்ளது
  4. ரியல்மி P4s 5G இந்தியாவின் அறிமுக காலக்கெடு, சேமிப்பு மாறுபாடுகள் மற்றும் வண்ண விருப்பங்களுடன் கசிந்தது
  5. ரியல்மி 16டி 5ஜி vs ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி vs மோட்டோரோலா எட்ஜ் 70 :இந்திய விலை, விவரக்குறிப்புகள் ஒப்பீடு
  6. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி Z Fold 5, Z Flip 5 போன்களுக்கு ஒன் யுஐ 8.5 ஸ்டேபிள் அப்டேட் கிடைத்துள்ளதாகத் தகவல்
  7. ஒப்போ ஏ6சி 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  8. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி 15 5ஜி போன்களின் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாக தகவல்
  9. ஒப்போ ஏ6சி (Oppo A6c) இந்திய விலை, மெமரி கட்டமைப்புகள் எதிர்பார்க்கப்படும் அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தன
  10. மோட்டோ G37, G37 பவர், பட்ஸ் 2 இந்தியாவில் விற்பனைக்கு வந்தன: விலை, சலுகைகள் விவரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.