டிரிபிள் ரியர் கேமராவைக் கொண்ட Tecno Camon 12 Air!

விளம்பரம்
Edited by Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 16 அக்டோபர் 2019 14:53 IST
ஹைலைட்ஸ்
  • hole-punch டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது Tecno Camon 12 Air
  • இந்த போன் triple rear கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
  • இந்தியாவில் இந்த போனில் விலை ரூ.9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Tecno Camon 12 Air திங்களன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Transsion Holdings பிராண்டிலிருந்து வரும் இந்தியாவின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆகும். Tecno Camon 12 Air-ன் சிறப்பம்சமாக hole-punch டிஸ்பிளேவை நிறுவனம் ‘Dot-in Display' என்று அழைக்கிறது. 

இந்தியாவில் Tecno Camon 12 Air-ன் விலை: 

இந்தியாவில் Tecno Camon 12 Air-ன் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக கிடைக்கிறது. இந்த போன் Bay Blue மற்றும் Stellar Purple நிறங்களில் விற்பனை செய்யப்படும். அறிமுகம் குறித்து டிரான்ஸியன் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அரிஜீத் தலபத்ரா, Tecno Camon 12 Air தற்போது ஆஃப்லைன் தளத்தில் மிகவும் மலிவு விலையில், ‘Dot in-display'-வைக் கொண்டுவருவதற்கான திட்டத்தை வைத்திருக்கிறோம் என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tecno Camon 12 Air-ன் விவரக்குறிப்புகள்:

இரட்டை சிம் கொண்ட Tecno Camon 12 Air, Android 10 அடிப்படையிலான HiOS 5.5-யால் இயங்குகிறது. 6.55-inch HD+ (720x1600 pixels) டிஸ்பிளேவுடன் 20:9 aspect ratio, 90.3 percent screen-to-body ratio மற்றும் peak brightness of 500 nits போன்ற அம்சங்கள் உள்ளன. 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek Helio P22 SoC-யால் இயக்கப்படுகிறது.


Tecno Camon 12 Air-ல் triple rear கேமரா அமைப்பு உள்ளது. (f/1.8 aperture) உடன் 16-megapixel primary சென்சார், (2.5cm macro shots)-ற்கு 2-megapixel secondary சென்சார் மற்றும் மூன்றாவது கேமராவாக (120-degree wide-angle lens) உடன் 5-megapixel சென்சார் உள்ளது. மேலும், f/2.0 aperture மற்றும் 81-degree wide-angle lens உடன் 8-megapixel selfie கேமரா உள்ளது.

Tecno Camon 12 Air, 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0 மற்றும் GPS/ A-GPS உள்ளது.  accelerometer, ambient light sensor மற்றும் ஸ்மார்ட்போனை 0.27 வினாடிகளில் Unlock செய்ய ‘anti-oil' fingerprint சென்சார் ஆகிய சென்சார்கள் உள்ளன. இது Face Unlock அம்சத்தை ஆதரிக்கிறது.

இது 4,000mAh பேட்டரியில் இயங்குகிறது. இந்த போன் 12 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்க மதிப்பிடப்படுகிறது. Tecno Camon 12 Air164.29x76.3x8.15mm அளவையும் 172 கிராம் எடையும் கொண்டது.

 
KEY SPECS
Display 6.55-inch
Processor MediaTek Helio P22
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Tecno Camon 12 Air
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  2. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  3. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  4. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  5. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  6. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  7. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  8. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
  9. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  10. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.