சவுண்ட் பார், ஹெட்ஃபோன்களின் விலையை  அதிரடியாக குறைத்த சோனி! வாங்க ரெடியா?

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 18 ஜூன் 2020 16:37 IST
ஹைலைட்ஸ்
  • Sony speakers are getting promotional price cuts of up to Rs. 8,000
  • Sony HT-X8500 single soundbar is currently available at Rs. 29,990
  • Sony WH-H910N headphones are also getting a price cut of Rs. 4,000

SRS-XB402M, SRS-XB41, SRS-XB32, SRS-XB12 ஆகிய சவுண்ட் பார்களின் விலை ரூ. 8 ஆயிரம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.  

எலக்ட்ரானிக் சாதனங்கள் துறையில் முன்னணியில்  இருந்து வரும் சோனி நிறுவனம் தனது ஹெட்ஃபோன் மற்றும் சவுண்ட் பார்களின் விலையை  அதிரடியாக குறைத்துள்ளது.  அதன் விவரத்தை பார்க்கலாம். 

இசைப் பிரியர்கள் ஒவ்வொரு முறையும் புதிய ஹெட்ஃபோன் வரும்போதும் அதனை வாங்கி பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். என்னதான் சிறப்பு அம்சங்களை கொண்டதாக இருப்பினும், அதை விட பெட்டராக ஒன்று வராதா என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மனதில் எழுகிறது.

முன்பு வயர் இயர் போன்கள் நல்ல வரவேற்பில் இருந்தன. தற்போது அவை ப்ளூடூத் வயர்லெசுக்கு மாறி பல்வேறு அதிலும் தரமான அம்சங்களை கொண்ட சாதனங்கள் வெளி வருகின்றன. தற்போது சவுண்ட்பார் எனப்படும் ஸ்பீக்கர்கள் வரவேற்பை பெற்று வருகின்றன. 

சவுண்ட் சிஸ்டத்தில் முன்னணியாக இருக்கு சோனி தற்போது அதிரடி ஆஃபர்களை அள்ளி விட்டுள்ளது. அதன் விவரம்-

சோனி WH-1000XM3 ஹெட்போன்கள் விலை ரூ. 5 ஆயிரம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் விலை  ரூ. 24,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ShopatSC.com  என்ற இணைய தளத்தில் இதனை வாங்கலாம். இது  30 மணி நேரம் சார்ஜ் தாங்கும்.

சோனி WH-H910N என்ற ஹெட்போன் விலை ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.  தற்போது அதன் விலை ரூ. 18,891. இது 35 மணிநேரம் சார்ஜ் நீடிக்கும் 

இதேபோன்று பட்ஜெட் ஹேட்போன்களின் விலையும் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. 

Advertisement

SRS-XB402M, SRS-XB41, SRS-XB32, SRS-XB12 ஆகிய சவுண்ட் பார்களின் விலை ரூ. 8 ஆயிரம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.  

இதேபோன்று குறைக்கப்பட்ட மற்ற ஹெட்போன்கள் மற்றும் சவுண்ட் பார் ஸ்பீக்கர்களின் விலைப்பட்டியல் சோனியின் இணைய  தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இசை பிரியர்கள்,  இந்த ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Sony, Sony Headphones, Sony Speakers, Sony Soundbar
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகம்
  2. எதிர்கால கேலக்ஸி போன்களில் வரவிருக்கும் சாம்சங்கின் புதிய 2D/3D டிஸ்ப்ளே தொழில்நுட்ப விவரங்கள்
  3. நீக்கப்பட்ட சாட்களின் அறிவிப்புகளைப் பெறும் பிழையைச் சரிசெய்து iOS 26.4.2 அப்டேட் வெளியிடப்பட்டது
  4. ஆண்ட்ராய்டு ஆப் பதிவுகளை விரைவுபடுத்த கூகுள் 'சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல்' அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது
  5. கூகுள் கிளவுட் நெக்ஸ்ட் 2026: புதிய ஜெமினி மற்றும் வொர்க்ஸ்பேஸ் இன்டலிஜென்ஸ் அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்தது
  6. ஒன்பிளஸ் நார்டு CE 6: 144Hz திரை, 50MP கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்தியா அறிமுகத்திற்கு முன் வெளியானது
  7. ரூ. 30,000-க்கு உட்பட்ட சிறந்த கைபேசிகள்: விவோ டி5 ப்ரோ, இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் மற்றும் பல மாடல்கள் இவை
  8. இந்தியாவில் மோட்டோரோலா Edge 70 Pro, ஒன்பிளஸ் Nord 6 மற்றும் ரெட்மி Note 15 Pro+: விலை & சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  9. இந்தியாவில் போட் Aavante Prime X சவுண்ட்பார் அறிமுகம்: டால்பி அட்மாஸ் & வயர்லெஸ் ஸ்பீக்கர்களுடன் அதிரடி விலை!
  10. சென்ஹைசர் CX 80U, சென்ஹைசர் HD 400U USB டைப்-C இணைப்புடன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.