இந்தியாவில் விற்பனையை தொடங்கிய ரெட்மி நோட் 7 ப்ரோவின் புதிய மாடல்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 11 ஏப்ரல் 2019 10:01 IST
ஹைலைட்ஸ்
  • இந்த தயாரிப்பு இன்று முதல் விற்பனையை துவங்குகிறது!
  • ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது!
  • இந்த தயாரிப்பு கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகமானது.

இந்தியாவில் ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் 6ஜிபி ரேம்+128ஜிபி மெமரி கொண்ட மாடல்!

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் (6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதியுடைய) மாடல் இன்று ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. 

இன்று மதியம் 12 மணி முதல் எம்ஐ.காம், ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ (6ஜிபி + 128ஜிபி) மாடல் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த பிப்ரவரி மாதம் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் மற்ற மாடல்கள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வெளியாகியன. அதே போனின் இந்த புதிய மாடல் தற்போது இந்தியாவில் வெளியாகியுள்ளது.

6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதியை கொண்ட இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன், ரூ.19,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே இந்த ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் வெளியான சில மணிநேரங்களில் இந்த தயாரிப்பு விற்பனையாகிவிடும் என எதிர்பார்கப்படுகிறது.

சியோமியின் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதியுடை மாடல் இதுவரை பல முறை விற்பனைக்கு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை:

ரூ.13,999க்கு ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதியுடை மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதியுடை) மாடல் ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு தயாரிப்புகளுமே நேப்டியுன் ப்ளூ, நேபுலா ரெட் மற்றும் ஸ்பேஸ் ப்ளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள்:

ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் வெளியான ரெட்மி நோட் 7 போனில் இடம் பெற்றிருந்த 'ஆஃரா டிசைனை' பெற்றுள்ளது. 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி வசதிகளையும் இந்த போனும் பெற்றுள்ளது.

மேலும் 11nm ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரால் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ பவரூட்டப்பட்டுள்ளது. இதர வசதிகளாக (4ஜிபி/ 6ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 6ஜிபி / 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.

Advertisement

செயற்கை நுண்ணறிவு இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13  மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4கே சப்போர்ட் உடைய வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஆண்ட்ராய்டு பைய் போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் 4,000mAh பேட்டரி பவர், குயிக் சார்ஜ் சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற பல அப்டேட்களை இந்த போன் பெற்றுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சார்ஜ் போட மறந்தாலும் கவலை இல்ல! Oppo K14x 5G-ல அசுரத்தனமான 6500mAh பேட்டரி! விலை என்ன தெரியுமா?
  2. ஒன்பிளஸ் வெறியர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 13 விலையில 12,000 ரூபாய் அதிரடி குறைப்பு! இந்த சான்ஸ விட்றாதீங்க மக்களே
  3. iPhone-க்கு டஃப் கொடுக்க Samsung S26 ரெடி! எப்போ லான்ச்? என்னென்ன ஸ்பெஷல்? முழு விவரம் உள்ளே
  4. OnePlus-ல இவ்வளவு கம்மி விலையா? Pad 3 முதல் Buds Pro 3 வரை வாரி வழங்கும் சலுகைகள்
  5. பட்ஜெட் விலையில ஒரு தரமான 5G போன்! Lava Bold N2 இந்தியாவிற்கு வராரு.. மத்த பிராண்ட்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க
  6. டேட் குறிச்சாச்சு! Samsung Galaxy S26 பிப்ரவரி 25-ல் லான்ச்.. சாம்சங் வலைதளத்திலேயே லீக் ஆன ரகசிய தகவல்
  7. ஒருவழியா வந்தாச்சு! வாட்ஸ்அப் வெப்-ல இப்போ டைரக்டா வீடியோ கால் பேசிக்கலாம்.. அந்த 'Desktop App' தலைவலி இனி வேண்டாம்
  8. ஐபோன் 16 இப்போ இன்னும் சீப்பா கிடைக்குது! வேலண்டைன்ஸ் டே முன்னிட்டு ரூ. 8,000 வரை தள்ளுபடி.. இந்த சான்ஸை விட்றாதீங்க
  9. Infinix-ல இப்படி ஒரு போனா? Note 60 Pro டீசர் வந்தாச்சு.. அந்த மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே டிசைன் செம மாஸ்
  10. கீழே விழுந்தாலும் ஒன்னும் ஆகாது! மிலிட்டரி கிரேடு பலத்துடன் Itel A100 வந்தாச்சு.. நெட்வொர்க் இல்லாமலேயே பேசலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.