இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு iOS 13 செட் ஆகாது: எந்தெந்த போன்கள்? தகவல்கள் உள்ளே!

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 14 மே 2019 18:59 IST
ஹைலைட்ஸ்
  • ஐபோன் 6, மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் ஆகிய போன்களுக்கு iOS 13 செட் ஆகாது
  • ஐபாட் மினி 2 மற்றும் ஐபாட் ஏர் ஆகிய சாதனங்களும் இந்த லிஸ்டில் உள்ளது
  • ஜூன் மாதம் நடக்கவுள்ள நிகழ்வின்பொழுது iOS 13-ஐ வெளியிடவுள்ளது

இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு iOS 13 செட் ஆகாது


ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை உபயோகிப்பதன் பயன் என்னவென்றால், அந்த மாடல் எவ்வளவு பழையதாக இருந்தாலும், புதிதாக வரும் அப்டேட்கள் அவற்றிற்கு பொருந்தும். அதற்கு உதாரணம் எப்போது வந்த ஆப்பிள் ஐபோன் 5-விற்கு இப்போது வெளியாகும் iOS 12 செட் ஆவது தான். ஆனால் இப்போது புதிதாக வந்துள்ள தகவலின்படி, இதில் சிறிது மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் iOS 13-ஐ சில போன்கள் பெறாமல் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக வரவுள்ள ஆப்பிள் iOS 13-ன் அப்டேட் இந்த ஸ்மார்ட்போன்களான ஐபோன் 5s, ஐபோன் SE, ஐபோன் 6, மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் ஆகிய போன்களுக்கு கிடைக்கப்பெறாமல் போகலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த அப்டேட்-ஐ ஆப்பிள் நிறுவனம் ஐபாட் மினி 2 மற்றும் ஐபாட் ஏர் ஆகிய சாதனங்களுக்கும் நிறுத்தி வைக்கப்படப்போவதாக ஐபோன்சாப்ட்-ன் அறிவிப்பின்படி தெரியவருகிறது. 

ஐபோன் 6, மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்டவை. இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிட்டு 5 வருடங்கள் ஆகிறது. மேலும்  ஐபோன் SE ஸ்மார்ட்போன் வெளியாகி வெரும் மூன்று வருடங்களே ஆகிறது. ஒருவேளை இந்த தகவல் உறுதியானதாக இருந்தால், நிறைய ஐபோன் வாடிக்கையாளர்கள், தங்கள் ஸ்மார்ட்போன்களை தூக்கி எறிந்துவிட்டு, புது ஸ்மார்ட்போன்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவர். 

இந்த புதிய அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ள தன் ஆண்டுவிழா நிகழ்வின்பொழுது வெளியிடவுள்ளது. iOS 13 மட்டுமின்றி, லேப்டாப்கள் மற்றும் கணினிகளுக்கான macOS 10.15, மற்றூம் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான watchOS 6 ஆகியவற்றையும் இந்த நிகழ்வின் போழுது வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, WWDC 2019, iOS 13
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ₹17,000-க்கும் மேல் மலிவான விலையில் கிடைக்கும் 50 மெகாபிக்சல் கேமரா கொண்ட சாம்சங்கின் அசத்தல் போன்!
  2. ரியல்மி நார்சோ 100x, மோட்டோ G77 பவர், நத்திங் போன் 3a லைட்: எது சிறந்தது?
  3. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் N6x போனின் டிசைன், கலர் விவரங்கள் டீஸ் செய்யப்பட்டுள்ளன!
  4. கூகுள் ஜெமினி 3.6 ஃபிளாஷ் & 3.5 ஃபிளாஷ்-லைட் அறிமுகம்; ஜெமினி 4 பயிற்சி நடப்பதாக தகவல்!
  5. சாம்சங் அன்ப்பேக்டு இன்று: கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8, ஃபிளிப் 8 நேரலையை பார்ப்பது எப்படி?
  6. போட் ஏர்டோப்ஸ் புரோகிளிப் மதிப்புரை: அன்றாட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது
  7. NFC ஆதரவுடன் ஆஃப்லைன் யுபிஐ கட்டண வசதி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்
  8. விவோ S2 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்: விளம்பர போஸ்டர் கசிந்தது
  9. டெல் ஏலியன்வேர் 16X அரோரா, 16 & 18 ஏரியா-51 இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
  10. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 தொடர் விவரங்கள் கசிந்தன; புரோ மேக்ஸ் மாடலில் டைமன்சிட்டி 9600 புரோ சிப்செட் இடம்பெறலாம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.