இளைஞர்களின் தலையில் கொம்பு முளைக்கிறது, காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு: ஆய்வு!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 21 ஜூன் 2019 16:48 IST

தலையின் பின்புறத்தில் வளரும் எழும்பு

Photo Credit: Scientific Reports

ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்க்கை முறையில் பல விஷயங்களை மாற்றிவிட்டது. எப்படி மற்றொருவரை தொடர்பு கொள்கிறோம் என்பதிலிருந்து, நியூஸ் பேப்பர், புத்தகங்கள் படிப்பது வரை அனைத்தையுமே ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி மாற்றியமைத்துள்ளது. இது நம் அன்றாட வாழ்க்கை முறை, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடென்பது இவற்றில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, நம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்கிறது ஒரு ஆய்வு. இந்த ஆய்வின்படி, ஸ்மார்ட்போனின் அதீத பயன்பாட்டால் இளைஞர்கள் தலையின் மண்டையோட்டு பகுதியில் கொம்பு போன்ற ஒரு எழும்பு முளைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. சிறு வயதில் தலையும் தலையும் இடித்துக்கொண்டால் கொம்பு முளைக்கும் என்பார்கள். அதை இப்போது நினைத்து,'கொம்பு முளைக்குமா!' என சிற்ப்பதுண்டு. ஆனால், இந்த ஆய்வு கொம்பு முளைக்கும், ஆனால் காரணம்தான் வேறு என்பதை கூறியுள்ளது. ஸ்மார்ட்போன் உபயோகித்தால் எப்படி கொம்பு முளைக்கும், ஆராய்ச்சியாளர்களின் பதில்கள் மூலம் தெரிந்துகொள்ளலாமே!

இந்த புதிய ஆய்வை நடத்திய பயோமெக்கானிக்ஸ் ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்களின் தலையில் கொம்பு போன்று ஒரு எழும்பு வளர்கிறதுஎன்றும், அதற்கு காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுதான் என்றும் கூறியுள்ளனர். தலையில் எழும்பு வளர்வதற்கும் ஸ்மார்ட்போனின் உபயோகத்திற்கும் என்ன தொடர்பு என உடனடியாக நம் மனதிற்குள் ஏற்படும் கேள்விக்கும், இந்த ஆராய்ச்சியாளர்கள் பதிலளித்துள்ளனர்.

அவர்கள் கூறிய பதில் இதோ,

ஒருவர் நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகையில், அவர் நீண்டே நேரம் தலையை குனிந்தபடியே இருப்பார். இதன் அப்போதைய விளைவு கழுத்து வலி போன்று சிறிய பாதிப்பாக இருக்கும். ஆனால், இது அதிக நாட்களுக்கு தொடர்ந்தால், இதன் பாதிப்பு வேறு மாதிரி பெரிதாக இருக்கும். அந்த பெரிய பாதிப்பு எப்படியாக இருக்குமேன்றால், ஒருவரின் தலை மண்டையோட்டில் எழும்பு வளர்ச்சியாக இருக்கும். இந்த எழும்பு தலையின் பின்புறத்தில் கழுத்தில் மேலுள்ள மண்டையோட்டு பகுதியில் வளரும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கழுத்தின் மேல் பகுதியில் வளரும் இந்த எழும்பு கொம்பு போலவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.


ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள சன்ஷைன் கோஸ்ட் பலகலைகழகத்தை சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்களே இந்த ஆய்வை மேற்கொண்டு, முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வின் முதல் அறிக்கையை 2016 ஆண்டே வெளியிட்ட இவர்கள், 18 முதல் 30 வயது உள்ளவர்களில் 218 பேரை தங்களது ஆய்விற்குள் உட்படுத்திக்கொண்டனர். முதலில், அவர்களது தலைகள் எக்ஸ்-ரே எடுத்து வைக்கப்பட்டது. இந்த 218 பேரின் தலையையும் 3 வருடங்களுக்கு பிறகு தற்போது எக்ஸ்-ரே எடுத்து முன்பு இருந்த மண்டையோட்டு அமைப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில்,இதில் 41 சதவிகித்தினருக்கு, இந்த எழும்பு வளர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nature, Mobiles, Phone Addiction
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
  2. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விமர்சனம்: கிட்டத்தட்ட ‘ப்ரோ’ தரத்திலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்
  3. சியோமி ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோ அறிமுகம்: 1.74-இன்ச் AMOLED திரை, 21 நாட்கள் பேட்டரி ஆயுள்
  4. ஒப்போ ஃபைண்ட் X9s, விவோ X300 FE, ஒன்பிளஸ் 15: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  5. புதிய அடோப் மற்றும் கான்வா கனெக்டர்கள் மூலம் ஏஜென்டிக் வடிவமைப்பு உருவாக்கத்தை வழங்குகிறது கூகுளின் ஜெமினி
  6. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் விவோ X300 அல்ட்ரா: இதில் எது சிறந்தது?
  7. ஒப்போ ரெனோ 16 ,ரெனோ 16 கேமரா விவரம் டீஸ் செய்யப்பட்டது; இந்திய அறிமுக காலம் ஆன்லைனில் வெளியானது
  8. விவோ S தொடர் S2 மூலம் மீண்டும் இந்தியாவிற்கு: அறிமுக காலம், விலை விவரம் கசிந்தது
  9. HMD வைப் 2 5G இந்தியாவில் அறிமுகம்: 6,000mAh பேட்டரி, 128GB வரை சேமிப்பகம்: விலை, விவரக்குறிப்புகள்
  10. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.