ரிஃபண்டு கேட்ட ‘பிக்சல் 3’ உரிமையாளர்… 10 போன்களை அனுப்பி தெறிக்கவிட்ட கூகுள்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 20 ஏப்ரல் 2019 11:48 IST

ரிஃபண்டு கொடுப்பதற்கு பதில் கூகுள் நிறுவனம் 10 பிக்சல் 3 போன்களை அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது. 

Photo Credit: Imgur/ Cheetohz

தனது பிக்சல் 3 போனுக்கு ரிஃபண்டு கேட்ட உரிமையாளருக்கு 10 பிக்சல் 3 போன்களை கூகுள் நிறுவனம் அனுப்பியுள்ளதாக தகவல் வந்துள்ளது. ரெடிட் தளத்தில் சீதோஸ் என்கிற நபர் இது குறித்து தகவலை தெரிவித்துள்ளார். அவர் வெள்ளை நிற கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட் போனை வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த போனில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து அதற்கு ரிஃபண்டு கேட்டு கூகுள் நிறுவனத்திடம் அனுப்பியுள்ளார். சுமார் 80 டாலர் ரிஃபண்டுதான் அவருக்கு கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்புப்படி 5,500 ரூபாய் ஆகும். மீதி ரிஃபண்டு கொடுப்பதற்கு பதில் கூகுள் நிறுவனம் 10 பிக்சல் 3 போன்களை அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது. 

இது குறித்து ‘ஆண்ட்ராய்டு போலீஸ்' தளம், ‘பெரிய நிறுவனங்களுக்கு கஸ்டமர் சர்வீஸ் விஷயத்தில் பல பிரச்னைகள் இருக்கும். ஆனால், கூகுளுக்கு இருப்பது மிக வித்தியாச பிரச்னை. ஒரு ரெடிட் பயனர், கூகுள் நிறுவனத்திடம் ஒரு பிக்சல் 3 போனுக்கு ரிஃபண்டு கேட்டிருக்கிறார். ஆனால், அவருக்கு வந்ததோ 10 பிக்சல் 3 போன்கள். தற்போது அவர் வேறு வழியில்லாமல் கூகுள் கவனத்தை ஈர்க்க தனது விசித்திர கதையை ரெடிட் தளத்தில் பதிவிட்டுள்ளார்' என்று தெரிவிக்கிறது. 

தற்போது தன் கையில் இருக்கும் 10 பிக்சல் 3 போன்களை சீதோஸ் என்கிற ரெடிட் பயனர், கூகுள் நிறுவனத்துக்குத் திரும்ப அனுப்ப முயன்று வருகிறார். மேலும் தனக்கு வரவேண்டிய மீதமுள்ள தொகையையும் வாங்க முயன்ற வருகிறார். 

ஆண்ட்ராய்டு போலீஸ் இந்த விவகாரம் குறித்து மேலும், ‘இன்னும் 900 டாலர் பணத்தை கூகுள் தனக்கு கொடுக்க வேண்டும் என்று சீதோஸ் நினைக்கிறார்' என்று கூறுகிறது. 

முன்னதாக சீதோஸ், தனது பழுதான போனுக்கு ரீஃபண்டு கேட்டதோடு தனியாக பிங்க் நிறத்திலான இன்னொரு பிக்சல் 3 போனை ஆர்டர் செய்துள்ளார். அதை கூகுள் நிறுவனம் தவறுதலாக புரிந்து கொண்டு 10 பிங்க் நிறத்திலான பிக்சல் 3 போன்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. 
 

IANS தகவல்களுடன் பதியப்பட்டது

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Google Pixel 3, Reddit

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் ஏழு சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு: டிப்ஸ்டர் தகவல்
  2. விவோ எக்ஸ் ஃபோல்டு 6 இந்தியாவின் அறிமுகம் வழக்கத்தை விட தாமதமாகலாம், விலை விவரம் கசிந்தது
  3. மோட்டோ G77 பவர் இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  4. நத்திங் போன் (4b) vs சாம்சங் கேலக்ஸி A37 5G vs ரில்மி 16: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  5. ஐபோன் 17 ப்ரோவை விட ஐபோன் 18 ப்ரோவில் குறிப்பிடத்தக்க வகையில் தடிமனான அலுமினியம் பிரேம் இருக்கும் எனத் தகவல்
  6. இந்தியாவில் வரவிருக்கும் கேலக்ஸி Z ஃபோல்டபிள்ஸ் சாதனங்களுக்கு முன்பதிவு தொடங்குகிறது சாம்சங்
  7. நத்திங் போன் (4b) இந்தியாவில் அறிமுகம்: 6,000mAh பேட்டரி, கிளிஃப் பார் இடைமுகம் மற்றும் ஆர்சிபி எடிஷன்
  8. இந்தியாவில் ஆப் ஸ்டோர் மற்றும் ஐகிளவுட் சேவைகளுக்குக் கார்டு கட்டண முறைகளை ஆப்பிள் மீண்டும் கொண்டுவந்துள்ளது
  9. அமெசான் பிரைம் டே விற்பனை: ப்ளூடூத் மற்றும் பார்ட்டி ஸ்பீக்கர்கள் மீதான சிறந்த தள்ளுபடிச் சலுகைகள்
  10. புதிய Z தொடர் மாடலின் வருகையை நிறுவனம் டீஸ் செய்துள்ளதால் iQOO Z11 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.