பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 பிப்ரவரி 2026 19:54 IST
ஹைலைட்ஸ்
  • Berry, Fog, Lavender மற்றும் Obsidian என 4 புதிய நிறங்களில் வரும் Pixel 1
  • பிப்ரவரி 18-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிமுகம்; அன்றே ப்ரீ-ஆர்டர் தொடங்குகிறத
  • கேமரா பார் (Camera Bar) இல்லாத முற்றிலும் புதிய பிளாட் கேமரா டிசைன்.

பிக்சல் 10a ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வர வாய்ப்புள்ளது.

Photo Credit: Google

கூகுள் பிக்சல் ரசிகர்கள் எல்லாருமே இப்போ செம குஷியில இருக்காங்க. ஏன்னா, இன்னும் சில நாட்களிலேயே அதாவது பிப்ரவரி 18, 2026 அன்னைக்கு கூகுளோட அடுத்த பட்ஜெட் மாஸ்டர் பீஸான Google Pixel 10a லான்ச் ஆகப்போகுது. ஆனா, லான்ச்சுக்கு முன்னாடியே இந்த போனோட அத்தனை கலர்ஸும் இப்போ "Android Headlines" மூலமா எக்ஸ்க்ளூசிவா லீக் ஆகியிருக்கு. இது என்னென்ன கலர்ஸ்? டிசைன்ல என்ன மாற்றம்? வாங்க டீப்பா பார்ப்போம். கூகுள் வழக்கமா கொடுக்குற அந்த போரடிக்கிற கலர்ஸை விட்டுட்டு, இந்த முறை கொஞ்சம் வைப்ரண்ட்டான (Vibrant) கலர்ஸை கையில் எடுத்திருக்காங்க. லீக் ஆன தகவல்படி இந்த 4 கலர்ஸ் தான் வரப்போகுது:

  1. Berry (பெர்ரி): இதுதான் இப்போ இன்டர்நெட்ல ஹாட் டாப்பிக். ஒரு அழகான அடர் சிவப்பு அல்லது பிங்க் கலந்த நிறத்துல இந்த போன் இருக்கு. பழைய பிக்சல் போன்கள்ல பார்த்த 'Peony' கலரை விட இது கொஞ்சம் பிரைட்டா இருக்கு.
  2. Fog (ஃபோக்): இது ஒரு 'ஆஃப்-ஒயிட்' அல்லது லைட் கிரே கலர். பார்க்க ரொம்ப கிளாஸியா, அமைதியா இருக்கு. வெள்ளை போன் பிடிச்சவங்களுக்கு இது ஒரு செம சாய்ஸ்.
  3. Lavender (லாவண்டர்): கூகுள் ஏற்கனவே தன்னோட டீசர்ல காட்டுன அந்த அழகான ஊதா (Purple-Blue) கலர் தான் இது. இது பாக்குறதுக்கு ரொம்ப பிரீமியமா இருக்கு.
  4. Obsidian (அப்சிடியன்): இது வழக்கமான கறுப்பு நிறம். "எனக்கு கலர்லாம் வேணாம் பாஸ், டீசன்ட்டா ஒரு போன் வேணும்" அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இதுதான் பெஸ்ட்.

டிசைன்ல பெரிய மாற்றம் - கேமரா பார் எங்கே?

பிக்சல் 6-ல இருந்து கூகுள் பயன்படுத்திட்டு வந்த அந்த அகலமான 'Camera Bar' டிசைனை இந்த முறை முழுசா மாத்திட்டாங்க. Pixel 10a-ல கேமராக்கள் இப்போ ஒரு சின்ன 'பில்-ஷேப்' (Pill-shaped) மாட்யூல்குள்ள இருக்கு. அதுவும் போனோட பாடியிலேயே பிளாட்டா உட்கார்ந்திருக்கு. இதனால போன் டேபிள் மேல வைக்கும்போது ஆடாது, பார்க்கவும் ரொம்ப ஸ்லீக்கா (Sleek) இருக்கு.

பெர்பார்மன்ஸ்னு பார்த்தா, இதுல Tensor G4 சிப்செட் வரப்போகுது. இது ஏற்கனவே Pixel 9 சீரிஸ்ல இருந்த அதே பவர்ஃபுல் சிப்செட் தான். இது கூடவே 8GB RAM மற்றும் 128GB/256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் வரும். AI வசதிகளான Gemini Live, Magic Editor எல்லாமே இதுல பட்டைய கிளப்பும்.

டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி:

6.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 nits பிரைட்னஸ்னு டிஸ்ப்ளேல கூகுள் எந்த சமரசமும் பண்ணல. பேட்டரியும் 5100mAh இருக்குறதால, ஒரு நாள் முழுக்க ஜாலியா போனை யூஸ் பண்ணலாம். 48MP மெயின் கேமரா இருக்குறதால போட்டோகிராபில இது கண்டிப்பா ஒரு கில்லியா தான் இருக்கும்.

விலை மற்றும் சலுகை:

இந்தியால இந்த போன் சுமார் ரூ. 49,999 ரேஞ்சுல லான்ச் ஆகலாம்னு எதிர்பார்க்கப்படுது. பிப்ரவரி 18-ல இருந்து Flipkart மற்றும் Google Store-ல ப்ரீ-ஆர்டர் பண்ணிக்கலாம். கூகுள் ஸ்டோர்ல ரிஜிஸ்டர் பண்றவங்களுக்கு சில ஸ்பெஷல் ஆஃபர்ஸும் காத்திருக்கு. மொத்தத்துல, Pixel 10a ஒரு பக்கா "Value for Money" போனா இருக்கப்போகுது. இந்த நாலு கலர்ல உங்களுக்கு எந்த கலர் ரொம்ப பிடிச்சிருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி A7 ப்ரோ 5G இந்தியாவில் அறிமுகம்: 32 மெகாபிக்சல் கேமரா, யுனிசோக் T8300 SoC; விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  2. இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ அறிமுகம்: ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 6,500mAh பேட்டரி வசதி கொண்டது
  3. ஆப்பிள் ஸ்மார்ட் கிளாஸ்: 4 விதமான பிரேம் டிசைன்களை அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல்
  4. பொறியியல் சவால்கள் இருந்தபோதிலும் ஐபோன் 18 புரோ மாடல்களுடன் ஐபோன் ஃபோல்டு விற்பனையும் தொடங்கவுள்ளது
  5. புதிய மாடல் வரும் முன் அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 7 விலை உயர்வு
  6. ஓப்போ F33 5G, ஓப்போ F33 ப்ரோ 5G ரவுண்டப்: அறிமுக தேதி, வடிவமைப்பு, வண்ண விருப்பங்கள், விவரக்குறிப்புகள்
  7. விவோ T5 ப்ரோ 5G ரவுண்டப்: இந்தியாவில் வெளியீட்டு தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  8. ஹூவாய் புரா 90 புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களின் வடிவமைப்பு, நிறம் மற்றும் சேமிப்பு விவரங்கள் உறுதியானது
  9. இன்ஸ்டாகிராமில் கருத்துகளை (Comments) எடிட் செய்யும் வசதி: 15 நிமிட கால அவகாசம் அறிமுகம்
  10. மார்ச் 2026 இந்திய போன் அறிமுகங்கள்: சியோமி 17 அல்ட்ரா, போகோ X8 ப்ரோ சீரிஸ், மோட்டோரோலா எட்ஜ் 70 மற்றும் பல
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.