ப்ளிப்கார்ட்'சூப்பர் வேல்யூ வீக்'... தள்ளுபடி பெறும் போன்களின் விபரங்கள்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 8 பிப்ரவரி 2019 15:52 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மீ 2ப்ரோ ரூபாய்.14,990 க்கு விற்பனை
  • வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும் ப்ளிப்கார்ட் சேல்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் போன்களுக்கு கூடுதல் தள்ளுபடி

ப்ளிப்கார்ட் சேல்: ரூபாய் 12,990 முதல் விற்பனை செய்யப்படும் ரீயல்மீ 2 ப்ரோ!

ப்ளிப்கார்ட் நிறுவனம் இன்று தனது 'சூப்பர் வேல்யூ வீக்' என்னும் பல புதிய ஆஃபர்களுடன் களமிறங்கியுள்ளது. மேலும் இந்த புதிய சேலில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ஸ்பெஷல் தள்ளுபடி இன்று பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஸ்பெஷல் தள்ளுபடி சேலில் பழைய ஸ்மார்ட் போன்களுக்கு ரூபாய் 1,000 தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த 'சூப்பர் வேல்யூ வீக்' சேலில் ரியல்மீ 2 ப்ரோ, ஹானர் 9N, நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 5.1 பிளஸ், ரெட்மீ 6 மற்றும் மோட்ரோலா ஓன் பவர் போன் முன்னணி ஸ்மார்ட்போன்கள் இடம்பெறுகிறது.

விவோ வி11 ப்ரோ, வி9 ப்ரோ மற்றும் ஓப்போ எஃவ் 9 ப்ரோ வாக்கு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூபாய் 2,500 கிடைக்கிறது. மேலும் ரூபாய் 99 க்கு கம்பிளிட் மொபைல் ப்ரோடெக்ஷன் கிடைக்கிறது. அதுபோல 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி நினைவகம் கொண்ட ரியல்மீ 2 ப்ரோ மொபைல் போன் தனது அசல் விலையான ரூபாய் 13,990-யில் இருந்து ரூபாய் 12,990 ஆக குறைந்துள்ளது. அதே மாடல் மொபைல் போன் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி நினைவகம் கொண்ட மாடல் மொபைல் போன் தனது அசல் விலையில் இருந்து ரூபாய் 14,990 யாக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

 

ரூபாய் 9,999 க்கு ஹானர் 9N (3ஜிபி ரேம்/ 32 ஜிபி நினைவகம்) விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ரூபாய் 11,999 க்கு ஹானர் 9N (4ஜிபி ரேம்/ 64 ஜிபி நினைவகம்) விற்பனை செய்யப்படுகிறது. ஹானரின் 9N (4ஜிபி ரேம்/ 1280 ஜிபி நினைவகம்) ரூபாய் 17,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
 

 

மேலும் இந்த 'சூப்பர் வேல்யூ வீக்' நோக்கியா 6.1 பிளஸ் (ரூ.14,999) கும், ரெட்மீ 6 தற்போதைய ஆஃபர் விலையான (ரூ. 8,179) கும், நோக்கியா 5.1 (ரூபாய்.9,999) க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி, மோட்ரோலா ஓன் ஆகிய போன்களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் எல்ஜி நிறுவனத்தின் தயாரிப்பான எல்ஜி ஜி7 திங்க் கியூ ஸ்மார்ட்போன் 
29,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட் போனும் விலை குறைந்து ரூபாய் 14,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Can Redmi Note 6 Pro beat the Nokia 6.1 Plus and Zenfone Max Pro M1? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. லாவா போல்ட் N2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்: 5,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் வெளியீடு
  2. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
  3. ஐபோன் 18 ப்ரோ: சிறிய அளவிலான 'டைனமிக் ஐலேண்ட்' வசதியுடன் வெளியாகலாம் - தகவல்
  4. விவோ பேட் 6 ப்ரோ அறிமுகம்: 13.2-இன்ச் 4K டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்!
  5. விவோ X300 அல்ட்ரா மற்றும் X300s அறிமுகம்: 200MP கேமரா, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் பல சிறப்பம்சங்கள்!
  6. Oppo Find X9 Ultra உலகளாவிய அறிமுக தேதி உறுதி; Find X9s Pro கேமரா விவரங்கள் வெளியீடு
  7. Vi 5G விரிவாக்கம்: அடுத்த இரண்டு மாதங்களில் 90 நகரங்களுக்கு 5G சேவை வழங்கப்படும் என நிறுவனம் அறிவிப்பு
  8. ஆப்பிளின் ஏர் டிராப் (AirDrop) போன்ற புதிய வசதி: ஆண்ட்ராய்டு 17 மற்றும் One UI 9-ல் 'Tap to Share' அம்சம்களுடன்
  9. ஒன்பிளஸ் Ace 6 அல்ட்ரா ஏப்ரலில் அறிமுகமாக வாய்ப்பு: ரெட்மி K90 அல்ட்ராவுக்குப் போட்டியாக அமையுமா?
  10. விவோ X300s சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி: 200MP கேமரா மற்றும் 7,100mAh பேட்டரியுடன் வெளியாகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.