Flipkart Big Billion Days Sale 2019: எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 19 செப்டம்பர் 2019 14:15 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி 3 ப்ரோவுக்கு ரூ.2000 தள்ளுபடி
  • சாம்சங் S9+ போன்கள் ரூ.34,999 முதல் கிடைக்கிறது.
  • ரெட்மி நோட் 7S இந்த தள்ளுபடியில் இடம்பெற்றுள்ளது.

Flipkart Big Billion Days 2019 சேல் செப்.30ல் துவங்குகிறது.

இந்த மாத்தத்தில் நடைபெற உள்ள ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019ல் இடம்பெறவுள்ள சில போன்களின் விவரங்களை ஃப்ளிப்கார்ட் வெளியிட்டுள்ளது. இந்த விற்பனையானது, செப்.29ல் தொடங்கி அக்.4 வரை நடைபெற உள்ளது. இதில், மொபைல் விற்பனை செப்.30ல் தொடங்குகிறது. 

இந்த தள்ளுபடி விற்பனையின் போது, ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்களை வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அறிவித்துள்ளது. இந்த பிக் பில்லியன் டேஸ் சேலில், சாம்சங் S9+, ரியல்மி 3 ப்ரோ, மோட்டோரோலா ஒன் விஷன், ரெட்மி நோட் 7s உள்ளிட்ட பல போன்களும் இடம்பெற்றுள்ளன. 

இதில், மோட்டோரோலா ஒன் விஷன் போனின் விலை ரூ.5,000 குறைக்கப்பட்டு ரூ.14,999 விற்பனை செய்யப்பட உள்ளது. முன்னதாக, இந்த போனின் அறிமுக விலை ரூ.19,999 ஆக இருந்தது. 

இந்த தள்ளுபடி விற்பனையில் ரெட்மி நோட் 7s ரூ.10,119 (4ஜிபி) இடம்பெற்றுள்ளது. எனினும், அதன் சரியான தள்ளுபடி விலை குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனையை ஃப்ளிப்கார்ட் வரும் செப்.30ல் தொடங்க உள்ளது. 

இதேபோல், ஃப்ளிப்கார்ட் இணைதளம் செப்.20 முதல் தினமும் பிக் பில்லியன் டேஸில் இடம்பெற உள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தள்ளுபடி விலையுடன் அறிவிக்க உள்ளது.

இதில், ஆப்பிள், சியோமி, ரியல்மி, ஓப்போ, கூகுள், இன்பினிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் இடம்பெற உள்ளன.  இதில், இடம்பெற உள்ள ஒரு சில போன்களின் விவரங்கள்,  ரெட்மி நோட் 7 ப்ரோ, ரியல்மி 5, ஓப்போ F11 ப்ரோ, ரெட்மி 7A, ரியல்மி C2 உள்ளிட்ட பல போன்கள் இடம்பெற உள்ளன. 

Advertisement

ஏற்கனவே கூறியதுபோல், இந்த விற்பனையில் ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் பயனாளர்கள் 4 மணி நேரம் முன்னதாகவே ஆர்டர் செய்யலாம். இந்த விற்பனையின்போது, பல்வேறு லோன் ஆப்ஷன்களையும் பயன்படுத்தும் வகையில், ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. 
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Flipkart, Big Billion Days 2019, Big Billion Days
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.