‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 20 ஜூலை 2019 16:20 IST
ஹைலைட்ஸ்
  • அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 சென்ற ஆண்டு விற்பனைக்கு வந்தது
  • ஃபிளிப்கார்ட்டில் இந்த போனின் விலை குறைப்பு குறித்து விவரம் உள்ளது
  • இதற்கு முன்னரும் அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 விலை குறைக்கப்பட்டுள்ளது

குவாட்கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 மூலம் பவரூட்டப்பட்டுள்ள இந்த போன் 6 ஜிபி ரேம் வசதியுடன் இயங்குகிறது

அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 ஸ்மார்ட் போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த போன்களின் அனைத்து வகைகளும் விலை குறைப்பைப் பெற்றுள்ளன. அது குறித்து விவரங்கள் ஃபிளிப்கார்ட் தளத்தில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 1,500 ரூபாய் வரை அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 போன் வகைகளின் விலை குறைந்துள்ளது. இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் ஸ்மார்ட் போன் பிரிவில், அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த போனில், ஸ்னாப்டிராகன் 636 எஸ்.ஓ.சி, 5000 எம்.ஏ.எச் பேட்டரி, 6ஜிபி ரேம், 3.5 எம்.எம் ஜாக், டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. 

அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, விலை குறைக்கப்பட்டு 7,999 ரூபாய்க்குக் கிடைக்கும். 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் 8,999 ரூபாய்க்குக் கிடைக்கும். அதேபோல 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வசதி மாடல் 11,999 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த 3 வகைகளின் விலைகள் முறையே ரூ.8499, ரூ.10,499 மற்றும் 12,499 என்று இருந்தன. தற்போது 3ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் வகைகளுக்கு 500 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. 4ஜிபி வகைக்கு 1,500 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

ஃபிளிப்கார்ட்டில் இந்த மாற்றம் செய்யப்பட்ட விலையில் அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 கிடைக்கும். ஆக்ஸிஸ் கிரெடிட் அல்லது ஆக்ஸிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் 5 சதவிகித கேஷ்-பேக் தரப்படும். நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷனும் இருக்கிறது. கருப்பு, நீலம் மற்றும் க்ரே வண்ணங்களில் இந்த போனை வாங்க முடியும். 

அசூஸ் ஜென்போன் மேக்ஸ் M1 சிறப்பம்சங்கள்:

அசூஸ் ஜென்போன் மேக்ஸ் M1, டூயல் நானோ சிம் ஸ்லாட் வசதியுடன் 5.99 இன்ச் முழு எச்.டி ஸ்க்ரீன், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ வசதிகளைப் பெற்றுள்ளது. குவாட்கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 மூலம் பவரூட்டப்பட்டுள்ள இந்த போன் 6 ஜிபி ரேம் வசதியுடன் இயங்குகிறது. 64 ஜிபி உள் சேமிப்பு வசதியைப் பெற்றுள்ள இந்த போனின் சேமிப்பு வசதியை 2டிபி வரை உயர்த்த முடியும். 

3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வகைகள் கொண்ட போன், 13 மெகா பிக்சல் கொண்ட முதன்மை ரியர் கேமராவைப் பெற்றுள்ளது. 5 மெகா பிக்சல் கொண்ட இரண்டாம் நிலை கேமராவையும் இந்த போன் பெற்றுள்ளது.

அதே நேரத்தில், 6ஜிபி ரேம் வசதி கொண்ட போன், 16 மெகா பிக்சல் முதன்மை கேமராவைப் பெற்றுள்ளது.
 
16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவையும் இந்த போன் கொண்டிருக்கிறது. இவைத் தவிர 5,000 எம்.ஏ.எச் பேட்டரி வசதி, இந்த போனின் மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. 


 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and construction quality
  • Vibrant screen
  • Great performance
  • Decent cameras
  • Excellent value for money
  • Bad
  • Relatively disappointing battery life
  • Awkward camera app interface
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  2. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  3. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  4. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  5. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  6. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  7. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  8. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  9. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  10. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.