புதிய தொழில்நுட்பத்தை இறக்கி, மைக்ரோசாப்ட் உடன் மல்லுக்கட்டப் போகும் ஆப்பிள்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 8 ஜூன் 2018 16:12 IST
ஹைலைட்ஸ்
  • Apple is reportedly developing its hybrid computer
  • Codenamed Star, the device will be powered by ARM processors
  • It is also said to run a derivative of iOS

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்தடுத்த வெளியீடுகள் பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கணினிக்களுக்கு போட்டியாக ARM ப்ராசஸர்கள் கொண்ட புதிய ஹைப்ரிட் கணினியை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த புதிய கணினி உருவாக்கலுக்கு `ஸ்டார் ' என்று ரகசிய பெயர் கொடுக்கப்பட்டு உள்ளதாம். இந்த புதிய சாதனத்தில் சிம் வசதி கொண்ட 4G LTE தொழில்நுட்பம் இருக்க வாய்ப்புள்ளது. இன்டெல் ப்ராசஸர்களை வைத்து இது நாள் வரை சமாளித்து வந்த ஆப்பிள் நிறுவனம், 2020 ஆம் ஆண்டு முதல் தனது சொந்த ப்ராசஸ்ர்களை பயன்படுத்த ஆரம்பித்து விடும் என்று அந்நிறுவன வட்டாரம் கூறுகிறது. 

Advertisement

9to5Mac என்ற தளத்தின் செய்தி, `ஆப்பிள் நிறுவனத்தின் `ஸ்டார்' திட்டம் அதன் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. பேகட்ரான் நிறுவனத்தால் முதல் சில மாதிரி சாதனங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த நிறுவனம் ஏற்கெனவே ஐபோன் மற்றும் ஐபேட் மின்னணு சாதனங்களை தயாரித்த அனுபவம் உடையது குறிப்பிடத்தக்கது' என்று கூறியுள்ளது.

இந்த புதிய கணினியில் எந்த ஆபரேட்டிங் மென்பொருள் இருக்கும் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை. தற்போது x86 ப்ராசஸர் தான் ஆப்பிள், மேக்-ல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு ஒரு முடிவு தந்து, முதன் முறையாக ஆப்பிள், ARM ப்ராசஸர்கள் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ள வாய்ப்பிருப்பதாகவும் யூகிக்க முடிகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த புதிய கணினியை ஆப்பிள் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தனது சொந்த ப்ராசஸர்களை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தும் பட்சத்தில், கணினியின் விலை பன்மடங்கு குறைக்க முடியும். இதை வைத்துப் பார்த்தால், தற்போது கிடைக்கும் மேக்புக் மாடல்களை விட எதிர்காலத்தில் வரப் போகும் ஆப்பிள் கணினிகள் விலை குறைந்தவையாக இருக்கக்கூடும். ஆப்பிள் நிறுவனம் ஒருங்கிணைக்கும் WWDC 2018-ல் இந்த புதிய ப்ராஜெக்ட் குறித்தான சில தகவல்கள் தெரிய வரும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, Mac, ARM
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.