ஷாட்டா சொல்லப்போனா.. "விலை குறைப்பு திருவிழா!" அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 - டாப் டீல்கள் இதோ

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 14 ஜனவரி 2026 18:34 IST
ஹைலைட்ஸ்
  • ஜனவரி 16 முதல் விற்பனை தொடக்கம்; பிரைம் மெம்பர்களுக்கு 15-ம் தேதியே ஆரம்ப
  • iPhone 17 Pro, S25 Ultra மற்றும் OnePlus 15 மீது ரூ.10,000 வரை தள்ளுபடி.
  • லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஹெட்ஃபோன்கள் மீது 75% வரை மெகா ஆஃபர்.

அமேசான் இந்தியா ஜனவரி 16, 2026 அன்று தொடங்கும் கிரேட் குடியரசு தின விற்பனையை அறிவித்துள்ளது.

Photo Credit: Amazon

புது வருஷம் பொறந்தாச்சு, பொங்கலும் வந்தாச்சு.. இப்போ அடுத்து என்ன? அதான் நம்ம அமேசானோட Great Republic Day Sale 2026! "கையில காசு இருக்கு, ஆனா நல்ல டீல் கிடைக்கலையே" அப்படின்னு வெயிட் பண்ணிட்டு இருந்தவங்களுக்கு, இதோ அமேசான் ஒரு பெரிய ஆஃபர் லிஸ்ட்டையே ரிலீஸ் பண்ணிட்டாங்க. வர்ற ஜனவரி 16-ம் தேதியிலிருந்து இந்த விற்பனை அதிகாரப்பூர்வமா ஆரம்பமாகுது. ஆனா நீங்க ஒரு அமேசான் பிரைம் (Prime) மெம்பரா இருந்தா, ஜனவரி 15-ம் தேதியே இந்த ஆஃபர் வேட்டையைத் தொடங்கலாம். வாங்க, இந்த சேல்ல எதெல்லாம் "ஒர்த்" டீல்னு பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் டீல்கள் - ஐபோன் டூ ஆண்ட்ராய்டு

இந்த சேல்ல எல்லாரும் ஆவலா காத்துட்டு இருக்கிறது ஆப்பிள் ஐபோன் ஆஃபர்ஸ்க்கு தான்.

● iPhone 17 Pro & Pro Max: சமீபத்துல லான்ச் ஆன இந்த மாடல்கள் மீது ரூ.9,000 வரை தள்ளுபடி கிடைக்குது. வங்கி சலுகைகள் மற்றும் கூப்பன்களைச் சேர்த்தா iPhone 17 Pro-வை ரூ.1,25,400-க்கு வாங்க முடியும்.
● iPhone 15: பட்ஜெட்ல ஐபோன் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸ். இதன் விலை ரூ.50,000-க்கும் கீழ குறைய வாய்ப்பு இருக்கு.
● Android Flagships: சாம்சங் Galaxy S25 Ultra அறிமுக விலையிலிருந்து ரூ.10,000 குறைந்து ரூ.1,19,999-க்கு கிடைக்குது. அதேபோல iQOO 15 (ரூ.65,999) மற்றும் OnePlus 15 (ரூ.68,999) மாடல்களும் அதிரடி விலைக்குறைப்பை சந்திச்சிருக்கு.
பட்ஜெட் மற்றும் கேமிங் போன்கள்:
கேமிங் பிரியர்களுக்கு iQOO Neo 10 5G (ரூ.33,999) மற்றும் OnePlus 15R (ரூ.44,999) ஆகியவை மிகச்சிறந்த டீல்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட் செக்மென்ட்டில் Realme Narzo 90x 5G வெறும் ரூ.12,749-க்கும், iQOO Z10 Lite வெறும் ரூ.9,999-க்கும் கிடைக்குது.

லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆஃபர்கள்:

படிப்புக்கும் சரி, ஆபிஸ் வேலைக்கும் சரி.. ஒரு நல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்.

● Laptops: HP, Dell, Asus மற்றும் Acer லேப்டாப்கள் மீது 45% வரை தள்ளுபடி இருக்கு. கேமிங் லேப்டாப்கள் ரூ.50,000 பட்ஜெட்டிலிருந்து ஆரம்பமாகுது.
● Audio & Wearables: boAt, Sony மற்றும் JBL ஹெட்ஃபோன்கள் மீது 70% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Sony WH-1000XM4 போன்ற பிரீமியம் ஹெட்ஃபோன்கள் செம விலைக்குறைப்பில் வரப்போகுது.
● Smartwatches: ஆப்பிள் வாட்ச் முதல் நத்திங் வாட்ச் வரை 60% வரை தள்ளுபடியில் கிடைக்குது.

வங்கி சலுகைகள் - எக்ஸ்ட்ரா சேவிங்ஸ்

வெறும் டிஸ்கவுண்ட் மட்டும் இல்ல மக்களே, உங்ககிட்ட HDFC Bank அல்லது SBI கார்டுகள் இருந்தா, அடிஷனலா 10% உடனடி தள்ளுபடி (Instant Discount) கிடைக்கும். இதுபோக, அமேசான் பே ஐசிஐசிஐ கார்டு யூஸ் பண்ணா அன்லிமிட்டட் 5% கேஷ்பேக் ஆஃபரும் இருக்கு. அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026-ல் மொபைல் போன், டிவி, வாஷிங் மெஷின்னு எல்லாத்துக்கும் ஆஃபர் மழை பொழியப்போகுது. உங்களோட விஷ்லிஸ்ட்-ஐ இப்போவே ரெடி பண்ணி வச்சுக்கோங்க. ஏன்னா, பெஸ்ட் டீல்கள் எல்லாம் சீக்கிரமே விற்றுத் தீர்ந்துவிடும். இந்த சேல்ல நீங்க எந்த ப்ராடக்ட் வாங்கப்போறீங்க? ஐபோனா இல்ல சாம்சங்கா? கமெண்ட்ல சொல்லுங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  2. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  3. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  4. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
  5. Huawei Enjoy 90 Pro Max, Huawei Enjoy 90 Plus அறிமுக தேதி அறிவிப்பு: Kirin சிப்செட்டுடன் வரும்
  6. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  7. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  8. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  9. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  10. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.