‘அமேசான் சம்மர் சேல்’- தள்ளுபடி பெறும் போன்களின் பட்டியல் வெளியானது!

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 2 மே 2019 14:07 IST
ஹைலைட்ஸ்
  • மே 4 ஆம் தேதி முதல் இந்த சேல் ஆரம்பமாகிறது
  • அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேல் மே 3 ஆம் தேதி ஆரம்பிக்கிறது
  • மொபைல் போன்களுக்கான தள்ளுபடி குறித்து அமேசான் விவரம் வெளியிட்டுள்ளது

மே 7 ஆம் தேதி வரை நடக்கும் இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்குத் தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது

Photo Credit: Amazon India

மே 4 ஆம் தேதி முதல் அமேசான் நிறுவனத்தின் ‘சம்மர் சேல்' ஆரம்பமாக உள்ளது. மே 7 ஆம் தேதி வரை நடக்கும் இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்குத் தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி விற்பனை ஒரு நாளைக்கு முன்னரே கிடைக்கும். ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேல், மே 3 ஆம் தேதி, மதியம் 12 மணிக்கே ஆரம்பிக்கும். நாளை இந்த சேல் தொடங்கவுள்ள நிலையில், அமேசான் நிறுவனம் எந்தெந்த ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர் கொடுக்கப்படும் என்பது குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. 

ஸ்மார்ட் போன்களைப் பொறுத்தவரை இந்த சேலில், 40 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சில போன்களுக்கு ‘இதுவரை இல்லாத அளவுக்கு ஆஃபர்' கொடுக்கப்பட உள்ளதாக அமேசான் கூறியுள்ளது. 

Advertisement

இந்த சம்மர் சேலின் போது, ஐபோன் X போன் 69,999 ரூபாய்க்கு கிடைக்கும். இதன் எம்.ஆர்.பி விலை 91,900 ரூபாயாகும். 9 மாதங்களுக்கு நோ காஸ்ட் இ.எம்.ஐ வசதியும் இந்த போன் வாங்கினால் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி S9 39,900 ரூபாய்க்கு கிடைக்கும். இதன் எம்.ஆர்.பி விலை ரூ.62,500 ஆகும்.

அதேபோல ஒன்பிளஸ் 6T போன் 32,999 ரூபாய்க்கு கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.41,999). இந்த போன் மிகக் குறைவாகவே கையிருப்பு இருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவத்துள்ளது. 

ஹானர் வியூ 20 (6ஜிபி + 128ஜிபி), ரூ.37,999 கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.42,999). இதனுடன் 5000 ரூபாய்க்கு அமேசான் கேஷ்-பேக் ஆஃபரும் கிடைக்கும். 

Advertisement

சாம்சங் கேலக்ஸி M20 முதன்முறையாக தள்ளுபடி விலையில் இந்த சம்மர் சேல் மூலம் கிடைக்கும். ரூ.10,990-க்கு கிடைக்கும் M20, தள்ளுபடி பெற்று 9,990 ரூபாக்கு கிடைக்கும். 

சில பட்ஜெட் போன்களுக்கு இந்த சம்மர் சேல் மூலம் ஆஃபர்கள் கிடைக்க உள்ளது. சியோமி எம்ஐ A2, ரூ.10,999 கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.17,499). ரெட்மி 6A, ரூ.5,999 கிடைக்கும். இதற்கு 500 ரூபாய் அமேசான் கேஷ்-பேக் ஆஃபரும் கிடைக்கும். ரெட்மி 6 ப்ரோ, 9999 ரூபாய்க்கு கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.13,499).

மேலும் ஹானர் ப்ளே போன் ரூ.13,999 கிடைக்கும் (எம்.ஆர்.பி விலை ரூ.21,999). ஹூவேய் Y9 ரூ.13,990 கிடைக்கும் (எம்.ஆர்.பி விலை ரூ.18,990). ஹானர் 8X, ரூ.12,999 கிடைக்கும் (எம்.ஆர்.பி விலை 17,999).

Advertisement

சாம்சங் கேலக்ஸி A50 போன் ரூ.19,990 கிடைக்கும் (எம்.ஆர்.பி விலை 21,000 ரூபாய் ஆகும்)

இதைத் தவிர எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி, கேஷ்-பேக் தள்ளுபடி, எஸ்.பி.ஐ கார்டு மூலம் வாங்கினால் 10 சதவிகித உடனடி தள்ளுபடிகளைப் பெறலாம். 


 

Advertisement
 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Amazon Summer Sale 2019, Amazon Summer Sale
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.