வெயிட் பண்ணது போதும்னு நினைச்ச நேரத்துல.. Samsung கொடுத்த ஷாக்! Galaxy S26 லான்ச் மார்ச் மாதத்திற்கு மாற்றம்

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 13 ஜனவரி 2026 13:23 IST
ஹைலைட்ஸ்
  • பிப்ரவரி 25-ல் Galaxy Unpacked நிகழ்வு மற்றும் மார்ச் 11-ல் அதிகாரப்பூர்வ
  • கடந்த ஆண்டுகளை விட இந்த முறை லான்ச் தேதி ஒரு மாதம் தள்ளிப்போகிறது
  • லான்ச் தள்ளிப்போக ஐபோன் 17-ன் தாக்கமும் ஒரு முக்கிய காரணம் எனத் தகவல்

Samsung Galaxy S26 மார்ச் 11 வெளியீடு, பிப்ரவரி 25 அறிமுகம், தாமத காரணங்கள் விவரம்

Photo Credit: Samsung

என்ன மக்களே! வருஷ வருஷம் ஜனவரி மாசம் வந்துட்டாலே சாம்சங் ரசிகர்கள் எல்லாரும் "எஸ்" சீரிஸ் போனுக்காக கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திட்டு காத்துட்டு இருப்பாங்க. ஆனா இந்த 2026-ல ஒரு சின்ன டுவிஸ்ட்! வழக்கமா ஜனவரி மாசமே கையில கிடைக்க வேண்டிய Samsung Galaxy S26, இப்போ கொஞ்சம் லேட்டா தான் வரும்னு தகவல்கள் சொல்லுது. அதாவது, மார்ச் மாசம் வரைக்கும் நாம பொறுமையா இருக்கணுமாம். ஏன் இந்த திடீர் தாமதம்? சாம்சங் பிளான்ல என்ன குழப்பம்? வாங்க, இதோட முழு பின்னணியையும் பார்ப்போம். சமீபத்திய லீக் தகவல்களின்படி, சாம்சங் தனது 'Galaxy Unpacked' நிகழ்வை வரும் பிப்ரவரி 25, 2026 (புதன்கிழமை) அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் தான் S26, S26 Plus மற்றும் S26 Ultra மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். ஆனா, போன் உங்க கைக்கு விற்பனைக்கு வர்றதுக்கு மார்ச் 11 ஆயிடுமாம். கடந்த வருஷம் S25 சீரிஸ் ஜனவரி 22-லேயே அறிமுகமாகி, பிப்ரவரி தொடக்கத்துல விற்பனைக்கு வந்தது. ஆனா இந்த தடவை கிட்டத்தட்ட ஒரு மாசம் தள்ளிப்போறது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

ஏன் இந்த தாமதம்? - காரணங்கள் பல

இந்த தாமதத்துக்கு பின்னாடி சில சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுது. முதல்ல, சாம்சங் தன்னோட மாடல் வரிசையில (Lineup) சில குழப்பங்களைச் சந்திச்சிருக்காங்க. முன்னாடி 'Edge' அப்படின்ற ஒரு புது மாடலை கொண்டு வரலாம்னு நினைச்சாங்க, ஆனா இப்போ அந்த பிளானை கைவிட்டுட்டு, வழக்கமான 'Plus' மாடலையே கொண்டு வர முடிவு பண்ணிருக்காங்க. இந்த கடைசி நேர மாற்றங்கள் தான் லான்ச் தள்ளிப்போக ஒரு காரணம்.

Advertisement


அதுமட்டுமில்லாம, ஆப்பிள் நிறுவனம் அவங்களோட ஐபோன் 17 (iPhone 17) விலையை உயர்த்தாம அப்படியே வச்சிருக்கிறது சாம்சங்குக்கு ஒரு பெரிய அழுத்தத்தை கொடுத்திருக்கு. இதனால, S26-ல கொடுக்க நினைச்ச சில காஸ்ட்லியான கேமரா அப்டேட்டுகளை தவிர்த்துட்டு, விலையை கம்மியா வைக்க சாம்சங் மறுபரிசீலனை பண்ணிட்டு இருக்காங்களாம். அதுக்கு இன்னும் கொஞ்சம் டைம் தேவைப்படுறதுனால தான் லான்ச் தள்ளிப்போயிருக்கு.

என்னென்ன எதிர்பார்க்கலாம்?

தாமதமானாலும் தரமா வரும்னு சொல்ற மாதிரி, S26 Ultra-வுல 6.9-இன்ச் பிரம்மாண்டமான டிஸ்ப்ளே மற்றும் 3000 nits பிரைட்னஸ் இருக்கும்னு சொல்றாங்க. முக்கியமா இதுல Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இருக்கப்போகுது, இது 2nm டெக்னாலஜில உருவாகுறதுனால பெர்ஃபார்மென்ஸ் வேற லெவல்ல இருக்கும். பேட்டரியும் 5,000mAh-ல இருந்து 5,400mAh வரைக்கும் அதிகமாக வாய்ப்பிருக்கு.
என்ன தான் லேட்டா வந்தாலும், சாம்சங் தன்னோட 'S' சீரிஸ்ல எப்போதுமே புதுமையைப் புகுத்தத் தவறாது. மார்ச் 11 வரைக்கும் வெயிட் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான், ஆனா அந்த காத்திருப்புக்கு ஏத்த பலன் கண்டிப்பா இருக்கும்னு நம்பலாம். நீங்க S26-க்காக வெயிட் பண்றீங்களா? இல்ல இந்த தாமதத்தால வேற போனுக்கு மாறப்போறீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Galaxy S26, Galaxy S26 series, Galaxy S
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.