வால்மார்ட்டின் கைக்கு வந்தது ஃபிளிப்கார்ட் - 77% பங்குகள் வாங்கப்பட்டது

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 20 ஆகஸ்ட் 2018 13:54 IST

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்கியதாக வால்மார்ட் அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று பங்குகளை வாங்கியுள்ளது வால்மார்ட். இப்போது வால்மார்ட்டிடம் 77% பங்குகளும், மீதம் உள்ள பங்குகளை இணை நிறுவனர் பின்னி பன்சால், டென்சென்ட், டைகர் க்ளோபல் மற்றும் மைக்ரோசாஃப்ட் கார்ப் இணைந்து வைத்திருக்கின்றனர்.

வால்மார்ட் 2 பில்லியட்ன் டாலர்களை (தோராயமாக 14,000 கோடி ரூபாய்) ஃபிளிப்கார்ட் பங்குகளை வாங்கியதன் மூலம் முதலீடு செய்துள்ளது. இது ஃப்ளிப்கார்ட்டின் தொழில் முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கும். இரண்டு பிராண்டுகளும் தங்கள் தனித்துவத்துடன் இயங்க எந்த தடையும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

வால்மார்ட்டின் அறிவிப்பின் படி, ஃபிளிப்கார்ட்டின் தற்போதையை உயர் மட்ட அதிகாரிகள் தான் நிறுவனத்தை வழி நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்சென்ட் மற்றும் டைகர் குளோபல் சார்பாக உயர்மட்டக் குழு உறுப்பினர்களும், புதிதாக தனி உறுப்பினர்களும் சேர்க்கப்படுவர் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஃபிளிப்கார்ட்டின் நிதி நிலை அறிக்கைகள் இப்போது வால்மார்ட்டின் சர்வதேச தொழிலின் ஒரு அங்கமாக சமர்ப்பிக்கப்படும். பலம் கொண்ட இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் புதிய ஆன்லைன் ஷாப்பிங் அலையை உருவாக்க இருப்பதாகவும் அந்த அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Walmart, Flipkart, Binny Bansal, Tiger Global, Microsoft
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சைபர் தாக்குதலுக்கான மென்பொருளை உருவாக்க ChatGPT-யைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஜப்பானிய சிறுவன் கைது
  2. இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகன விற்பனை இரு மடங்காக உயர்வு; டாடா மோட்டார்ஸ் முதலிடம்
  3. இந்தியாவில் ரூ. 3,000 விலைக்குள் அழைப்புகள் மற்றும் இசைக்கான சிறந்த டி.டபிள்யூ.எஸ் (TWS) இயர்பட்ஸ்
  4. டெக்னோ கேமோன் 50 அல்ட்ரா 5ஜி இந்தியாவில் ஜூலை 17-ல் அமேசான் மூலம் அறிமுகமாகிறது, வண்ணங்கள் உறுதி செய்யப்பட்டன
  5. இந்தியாவில் விண்டோஸ் 11 லேப்டாப்பில் பேட்டரி ஆயுளை நீட்டிப்பது எப்படி
  6. ஆசஸ் விவோபுக் 14, விவோபுக் 15 இன்டெல் கோர் சீரிஸ் 3 செயலிகளுடன் புதுப்பிக்கப்பட்டன: விலை, கிடைக்கும் தன்மை
  7. ஜெமினி ஆம்னி மூலம் இயக்கப்படும் வீடியோ ரிமிக்ஸ் அம்சத்துடன் கூகுள் போட்டோஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது
  8. ரியல்-டைம் உரையாடல்களுடன் ChatGPT வாய்ஸ் ஜிபிடி லைவ் மேம்படுத்தலைப் பெறுகிறது
  9. சேமிக்கப்பட்ட தொடர்புகளுக்கான பிறந்தநாள் அறிவிப்பு அம்சத்தில் வாட்ஸ்அப் பணிபுரியக்கூடும்
  10. நெட்ஃபிளிக்ஸ் இலவசமா? சில பயனர்களுக்கு 30 நாள் சோதனைக் சந்தா சலுகை கிடைக்கிறது: சரிபார்ப்பது எப்படி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.