அமேசானின் ஃப்ரீடம் சேல்! அதிரடி தள்ளுபடியில் லேட்டஸ்ட் மொபைல்கள் விற்பனை!!

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 2 ஆகஸ்ட் 2019 17:24 IST
ஹைலைட்ஸ்
  • Amazon Freedom Sale offers will include discounts on popular smartphones
  • The sale will kick off from August 7 for Prime members
  • Amazon's Freedom Sale will run until August 11

லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு Freedom Sale என்ற பெயரில் அமேசான் ஆன்லைன் ஆஃபர்களை வழங்கவுள்ளது. ஸ்மார்ட் போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படவுள்ளன. 

அமேசானின் இந்த விற்பனை ஆகஸ்ட் 8-ம் தேதி நள்ளிரவில் தொடங்கி 11-ம்தேதி வரை நடைபெறும். நீங்கள் Prime உறுப்பினர் என்றால் 7-ம்தேதி மதியமே இந்த ஆஃபர்களை பெற்றுக் கொள்ள முடியும். 

Prime உறுப்பினராக இருப்பதன் பலன் என்னவென்றால் சில பொருட்களின் டீல் குறைந்த காலத்திற்கே இருக்கும். இதனால் முன்னரே Access கிடைக்கும்போது அந்த பொருள் காலியாவதற்கு முன்பாக நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். Freedom sale டீசரை அமேசான் தனது இணைய தளத்தில் வெளியிட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளத. 

ஸ்மார்ட் போன்களின் விலையை 40 சதவீதம் வரைக்கும் குறைத்து வழங்கப்போவதாக அமேசான் கூறியுள்ளது. இந்த ரகங்களில் OnePlus 7 Pro மொபைல் விலை வெகுவாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று Galaxy M40 போன் சமீபத்தில் வெளிவந்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகளவு பூர்த்தி செய்தது. 32 மெகா பிக்ஸ்ல், 6 ஜிபி ரேம் கொண்ட இந்த மொபைல் தற்போது ரூ. 19,990-க்கு விற்பனையாகிறது. இதன் விலையும் குறையுமா என்ற எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அந்த எதிர்பார்ப்பை அமேசான் நிறைவேற்றும் என நம்பலாம். 

இதேபோன்று லேட்டஸ்ட் மொபைல்களான  Samsung M30, Samsung M20, Redmi Y3 ₹ 9,809, Redmi 7 ₹ 7,996, Nokia 6.1 Plus, Realme U1 ஆகியவற்றின் விலையும் குறைக்கப்படலாம். 

மிக அதிக விலைக்கு விற்பனையாகி வரும் Oppo Reno, Galaxy Note 9 ( ₹ 60,990) , Oppo F11 Pro, Vivo V15 ஆகியவற்றை எக்சேஞ் முறையில் பெற்றுக் கொள்ளலாம். இந்த Freedom Sale-ல் Exchange தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே மொபைல் பிரியர்கள் கொஞ்சம் 7-ம்தேதி வரை பொறுமையாக இருந்து, அமேசான் ஆஃபர்களை பொறுத்து மொபைல்களை வாங்கலாம். இதேபோன்று ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப், ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன், ஏர்ஃபோன், ஸ்மார்ட் டிவி போன்ற டிஜிட்டல் பொருட்களை வாங்குவோரும் 7-ம்தேதி வரை பொறுத்திருக்கலாம்.

அமேசான், ஃப்ளிப்ர்கர்ட் உள்ளிட்ட ஆன்லை ஆஃபர் குறித்த லேட்டஸ்ட் விவரங்களை https://tamil.gadgets360.com தளத்தில் அறிந்து கொள்ளலாம். 
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Amazon Freedom Sale
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பவர் பேங்க் இனிமேல் தேவையில்ல! 7,000mAh Battery கூட Oppo புதுசா இறக்குன A6 5G Mobile!
  2. தரமான Budget Phone தேடுறீங்களா? Samsung Galaxy M07-ன் விலையும் Specifications-உம் தெரிஞ்சுக்கோங்க!
  3. Alexa பேசுனா லைட் எரியணுமா? இந்த Amazon சேல்ல Smart Bulbs-க்கு இருக்கிற அதிரடி Deals-ஐ மிஸ் பண்ணாதீங்க!
  4. எப்பவும் போல டைப் பண்ண போரடிக்குதா? Clicky Sound-உடன் Premium Feel கொடுக்கும் Mechanical Keyboards ஆஃபர்!
  5. கரண்ட் பில் கம்மியாகணும்னா இதை வாங்குங்க! 5-Star Rated Washing Machines-க்கு Amazon கொடுக்கும் Mega Discount!
  6. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  7. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  8. Amazon-ன் Great Indian Festival விற்பனையில் JBL, Boat மற்றும் Zebronics Party Speakers-களுக்கு 72% வரை தள்ளுபடி
  9. பட்ஜெட் கவலை இனி இல்லை! Amazon-ன் Great Indian Festival Sale-ல் HP, Lenovo, Dell, Asus Laptops-களுக்கு 40% வரை தள்ளுபடி!
  10. Xiaomi-யின் புதிய ஃபிளாக்ஷிப் போன் Xiaomi 15T Pro உடன் MediaTek Dimensity 9400+ சிப்செட் அறிமுகம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.