கூகுள் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் Google Meet இலவசம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 ஏப்ரல் 2020 14:09 IST
ஹைலைட்ஸ்
  • Meet, அனைவருக்கும் இலவசமாக இருக்கும் என்று கூகுள் அறிவிக்கிறது
  • செப்டம்பர் 30-க்குப் பிறகு, கூட்டங்களுக்கு 60 நிமிட கால அவகாசம் இருக்கும்
  • ஜி சூட் எசென்ஷியல்ஸ் செப்டம்பர் 30 வரை அனைவருக்கும் கிடைக்கும்

Google Meet முன்பு G Suite பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது

Google Meet என்பது கூகுளின் வீடியோ கான்பரன்சிங் சேவையாகும். இது நாள்தோறும் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை இணைக்கிறது. இதற்கு மிகப்பெரிய காரணம் தற்போது பரவி வரும் கொரோனோ வைரஸ்தொற்று தான். தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக கடந்த சில நாட்களாக, மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து அலுவலக வேலைகள், ஆன்லைன் வகுப்புகள் போன்றவற்றைச் செய்து வருகின்றனர். இதற்காக Google Meet மற்றும் இது போன்ற பிற வீடியோ கான்பரன்சிங் சேவைகளின் ஆதரவு பயன்படுத்தப்படுகிறது.

இப்போது Google கணக்கு உள்ள அனைத்து பயனர்களுக்கும் Google Meet இலவசமாக கிடைக்கும் என்று ஆல்பாபெட்டின் கூகுள் அறிவித்துள்ளது. Google Meet-ல் ஒவ்வொரு நாளும் சுமார் 3 மில்லியன் புதிய பயனர்கள் சேர்க்கப்படுவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுளின் வலைப்பதிவில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு, ஏப்ரல் 29 முதல் Google Meet அனைவருக்கும் இலவசமாக கிடைக்கிறது. இருப்பினும் இந்த இலவச கிடைக்கும் காலம் வரும் சில வாரங்களில் ஒரு கட்டமாக விரிவாக்கப்படும்.

மே மாதம் முதல் எந்த பயனரும் Google Meet-க்கு பதிவுபெற முடியும் என்றும் இதற்காக அவர்களுக்கு கூகுள் கணக்கு மட்டுமே தேவைப்படும் என்றும் கூகுள் கூறுகிறது. தொழில் மற்றும் கல்வி குழுக்களின் பயனர்களுக்கு முன்னர் கிடைத்த அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். எளிமையான திட்டமிடல் மற்றும் திரை பகிர்வு, நிகழ்நேர தலைப்பு போன்றவை இதில் அடங்கும்.

இந்த சேவையை அனைவரும் இலவசமாகப் பெற மாட்டார்கள். ஆரம்பத்தில், சில பயனர்கள் இதை இலவசமாகப் பயன்படுத்த முடியும். மேலும், காலப்போக்கில் இது எல்லா நாடுகளிலும் வெளிவரும். கூகுள் இதற்காக 'Notify me' பக்கத்தையும் உருவாக்கியுள்ளது. அங்கு பயனர்கள் தங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், Google Meet-க்கு இலவச அணுகலைப் பெறும்போது அவர்களுக்கு அறிவிக்கப்படும். 

மேலும், Web-பிலும், iOS பயனர்களுக்கும், Android பயனர்களுக்கும் மொபைல் செயலி மூலம் இலவச அணுகல் கிடைக்கும் என்று கூகுள் கூறுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Google Meet, G Suite
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  2. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  3. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  4. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  5. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  6. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  7. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  8. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
  9. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  10. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.