இந்தியாவின் 400 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை: கூகுள் சாதனை

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 31 ஆகஸ்ட் 2018 12:55 IST
ஹைலைட்ஸ்
  • கூட்டம் அதிகமுள்ள 100 ரயில்நிலையங்களில் வை-ஃபை கொடுக்கப்பட்டுள்ளது
  • இதையடுத்து, 300 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி கொடுக்கப்பட்டது
  • 2016 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது

இந்தியாவின் 400 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதியை ஏற்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். 

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அமல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை கொடுக்கும் திட்டமும் இருந்தது. இதையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துறையுடன் கைகோத்து நாட்டில் இருக்கும் 400 ரயில் நிலையங்களுக்கு இலவச வை-ஃபை கொடுப்பது என்று முடிவெடுத்தது. இந்த மாபெரும் பணியை செய்ய ரெயில்டெல் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதனுடன் சேர்ந்து வேலை செய்தது கூகுள்.

முதலில் மிகவும் பரபரப்பான 100 ரயில் நிலையங்களில் இந்த இலவச வை-ஃபை சேவை கொடுக்கப்பட்டது. பின்னர், நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் 300 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் பரவலாக்கப்பட்டது. 

இந்த திட்டம் குறித்து கூகுள் நிறுவனம் தரப்பில், `இந்தியாவில் இருக்கும் ஒரு பெரும் மக்கள் கூட்டத்துக்கு அதிவேக இணையசேவையை எடுத்துச் செல்வது என்பது ஒரு மகத்தான பயணமாக இருந்தது. இதில் அவ்வளவு சவால்கள் நிறைந்திருந்தன. இதன் மூலம் அனைத்து இந்தியர்களையும் இணைய பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என்றுள்ளது.

ரெயில்-ஒயர் (Railwire) என்ற பெயரில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் கிடைக்கப் பெறும் இந்த வை-ஃபை, ஒரு பயனருக்கு சுமார் 30 நிமிடங்கள் இணைய சேவையை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும். இந்த அதிவேக இணைய சேவை மூலம் 350 எம்.பி டேட்டா-வை நுகர முடியும். 

 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Railways
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 9 JBL ப்ரோ ஸ்பீக்கர்கள்,10,200mAh பேட்டரியுடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் இந்தியாவில் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  2. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  3. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  4. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  5. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  6. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  7. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  8. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  9. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  10. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.