ஜூலை 15-ல் மற்றொரு பெரிய விற்பனை, 'ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ்' சேல்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 11 ஜூலை 2019 15:09 IST
ஹைலைட்ஸ்
  • ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு காலை 8 மணிக்கே விற்பனை துவங்குகிறது
  • ஜூலை 18 வரை இந்த விற்பனை நீடிக்கும்
  • மொபைல், டிவி, ஷூ, வாட்ச், பேக் என அனைத்திற்கு சலுகைகள்

இந்த விற்பனை ஜூலை 15 வரை நீடிக்கும்

ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்தியாவில் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி இந்த விற்பனை ஜூலை 15-ல் துவங்கி, ஜூலை 18 வரை நடைபெறும். இந்த விற்பனையில், எஸ்.பி.ஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஃப்ளிப்கார்ட், எஸ்.பி.ஐ கிரடிட் கார்டுகளுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது. அதுமட்டுமின்றி, ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு, இந்த விற்பனை முன்னதாகவே ஜூலை 15 அன்று காலை 8 மணிக்கு துவங்கிவிடும் என கூறியுள்ளது. 

பல சலுகைகளை பெற்றுள்ள இந்த விற்பனையில், டிவி சாதனங்களுக்கு 75 சதவிகிதம் வரை தள்ளுபடி, உடைகள், காலனிகள் போன்ற ஃபேஷன் சாதனங்களுக்கு 80 சதவிகிதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

இந்த விற்பனையில் இடம் பெற்றுள்ள ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் 7,499 ரூபாய் என்ற விலையிலிருந்து துவங்குகிறது. அதே நேரம் நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற தள்ளுபடி விலையில் விற்பனையாகவுள்ளது. போகோ F1, இன்பினிக்ஸ் நோட் 5 மற்றும் விவோ V9 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. 

விவோ V11, விவோ V11 Pro மற்றும் ஓப்போ F11 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு 2,000 ரூபாய் எக்ஸ்செஞ்ச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனையில் லெனோவா மற்றும் அல்கடெல் டேப்லெட்கள் 6,999 ரூபாய் என்ற விலையிலிருந்தே துவங்குகிறது. மேலும், இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ள சாம்சங் கேலக்சி டேப் A 12,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விற்பனையில், ஷூக்களுக்கு 40 முதல் 80 சதவிகிதம், வாட்ச் மற்றும் பேக்களுக்கு 80 சதவிகிதம் என தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி வீட்டு சாதனப் பொருட்களுக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ள ஃப்ளிப்கார்ட், 40 முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடியில் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Flipkart, Flipkart Big Shopping Days Sale
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.