'அமேசான் ப்ரைம் டே 2019' விற்பனை: என்னவெல்லாம் கொண்டு வரப் போகிறது?

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 25 ஜூன் 2019 15:10 IST
ஹைலைட்ஸ்
  • ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் இந்த விற்பனை நடைபெறவுள்ளது
  • பல புதிய தயாரிப்புகள் இந்த விற்பனையில் அறிமுகமாகலாம்
  • எச் டி எப் சி கார்டுகள் மூலமாக பணம் செலுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி

ஜூலை 15 முதல் இந்த 'அமேசான் ப்ரைம் டே' விற்பனை துவங்கவுள்ளது

Photo Credit: Amazon

அமேசான் நிறுவனம் 'ப்ரைம் டே' விற்பனைக்கான தேதிகளை அறிவித்துள்ளது. அதன்படி இந்த 'அமேசான் ப்ரைம் டே 2019' (Amazon Prime Day 2019) விற்பனை ஜூல 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெரும். இந்த 'ப்ரைம் டே' விற்பனை என்பது ஒவ்வொரு ஆண்டு அமேசான் நிறுவனம், தனது ப்ரைம் வாடிக்கையாளர்களுக்காக நடத்தப்படும் விற்பனை. இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த விற்பனை நடைபெருகிறது, உலகம் முழுவதிலும் இது ஐந்தாவது முறை இந்த 'ப்ரைம் டே' விற்பனை நடைபெருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்ற ஆண்டு 36 மணி நேரம் மட்டுமே நடந்த இந்த விற்பனை, இந்த ஆண்டு 48 மணி நேரம் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ள இந்த விற்பனையில், 1 மில்லியன் அளவிலான சலுகைகளை உலகம் முழுவதும் வழங்கவுள்ளது அமேசான் நிறுவனம். இந்த ஆண்டின் மிகப்பெரிய சலுகை விற்பனை இந்த 'அமேசான் ப்ரைம் டே' விற்பனையாக அமையலாம்.

இந்தியாவில், இந்த 'ப்ரைம் டே' விற்பனையின் பொழுது 1000 புதிய தயாரிப்புகளை அமேசான் நிறுவனம் அறிமுக்கப்படுத்தவுள்ளது. இந்த புதிய தயாரிப்புகள் ஒன்ப்ளஸ், அமேசான் பேசிக்ஸ், சாம்சங், இன்டெல் மற்றும் மற்ற முன்னனி நிறுவனங்களின் புதிய தயாரிப்புகள் இந்த விற்பனையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்.ஜி-யின் புதிய W30 ஸ்மார்ட்போன், ஆரஞ்சு நிற கேலக்சி M40, ஜே.பி.எல்-ன் ஆடியோ கியர்கள், 4K டிவிக்கள் என அனைத்து இதில் அடங்கும். 

மொபைல்போன்களுக்கென பல சலுகைகளை இந்த 'அமேசான் ப்ரைம் டே 2019' விற்பனையில் அமேசான் நிறுவனம் வழங்கவுள்ளது. மேலும், இந்த விற்பனை பக்கத்தில், 'இதுவரை என்றும் இல்லாத விலையில்' பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என உறுதியளித்துள்ளது. இந்த விற்பனையில், அமேசான் நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படவுள்ளது. 

எச்.டி.எஃப்.சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள அமேசான், இந்த விற்பனையின்போது, எச்.டி.எஃப்.சி கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெரும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது. மேலும், அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை பெருபவர்களுக்கு நிரைய சலுகைகளை வழங்கவுள்ளது.

மேலும், இந்த விற்பனை துவங்குவதற்கு முன்பு, ஜூலை 1 முதல் ஜூலை 14 வரை அமேசான் நிறுவனம் தன் 'அமேசான் ப்ரைம் வீடியோ'வில், தினம் தினம் புதிய புதிய படங்கள் மற்றும் இசை ஆகியவற்றை வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Prime Day 2019, Prime Day
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ+ இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; பெரிஸ்கோப் கேமரா உறுதி
  2. உலகளாவிய வெளியீட்டிற்கு முன் சியோமி 17T, 17 ப்ரோ விலை, ஸ்டோரேஜ் விவரங்கள் கசிவு
  3. விண்டோஸ் 11 கணினியில் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனை வெப்கேமாகப் பயன்படுத்துவது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  4. வாட்ஸ்அப்பில் உங்கள் எண்ணை மறைப்பது எப்படி: சிறந்த தனியுரிமைக்காக யூசர்நேம் அமைப்பது எப்படி
  5. சியோமி 17T தொடர் இரு டிஸ்ப்ளே அளவுகள், புதிய வண்ணங்களில் வரவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்
  6. HMD வைப் 2 5G, ரெட்மி A7 4G, லாவா யுவா ஸ்டார் 3: இந்தியாவில் விலை மற்றும் அம்சங்கள் ஒப்பீடு
  7. IMEI தரவுத்தளத்தில் கசிந்த iQOO 16: உலகளாவிய மற்றும் இந்திய அறிமுகம் உறுதியானதாக அறிக்கை
  8. நெட் நியூட்ராலிட்டி கவலைகளால் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சேவை ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை
  9. சியோமி 17T இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; உலகளாவிய அறிமுகத்திற்கு ஒரு வாரம் கழித்து வரவிருக்கிறது
  10. ரியல்மி 16T 5G விமர்சனம்: மலிவான விலையில் ப்ரோ மாடல் போன்ற தோற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.