அமேசான் ப்ரைம் தின விற்பனை ஜூலை 16 தொடங்கிறது; ஷாப்பிங் பண்ண ரெடியா?

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 3 ஜூலை 2018 21:21 IST
ஹைலைட்ஸ்
  • 200 புதிய பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளன
  • எச்டிஎப்சி வங்கி பரிவர்தனையில் 10% கேஷ் பாக்
  • அமேசான் வீடியோ, அமேசான் மியூசிக் ஆப்பர்கள் வெளியாக உள்ளன

The Amazon India Prime Day Sale 2018 will feature six flash sales

 

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இணையதள ஷாப்பிங் சேல் 2018 அமேசானின் ப்ரைம் தின விற்பனையின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அமேசான் இந்தியா ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக விற்பனை வரும் ஜூலை 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஜூலை 18 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கிடைக்கும்.

ஜூலை 16 ஆம் தேதி மதியம் 1 மணி முதல், ஆறு வகை ப்ளாஷ் சேல்கள் நடைப்பெற உள்ளன. ப்ரைம் தின விற்பனையில், எச்டிஎப்சி வங்கி கார்டுகளில், இஎம்ஐ அல்லது அமேசான் பே பரிவர்தனையில் 10% பணம் திரும்ப அளிக்கப்பட உள்ளது.

முக்கியமாக, 200க்கும் மேற்பட்ட பொருட்கள் இந்தியாவில் முதன் முறையாக ப்ரைம் தின விற்பனைக்கு வர உள்ளது. ஒன்ப்ளஸ், சென்ஹெய்சர், WD, காட்ரேஜ், க்ளவுட் வாக்கர், சீகேட், சாம்சங் ஆகிய நிறுவனங்களில் இருந்து புதிய பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளன. ‘அமேசான் இந்தியா ஆப் ஒன்லி’ போட்டியின் மூலம் கலந்து கொள்பவர்கள், ஒன்ப்ளஸ் 6 போன் வெல்லும் வாய்ப்புகளும் உள்ளது.

அமேசான் ப்ரைம் வீடியோ வாடிக்கையாளர்களுக்காக, ஜூலை 10 ஆம் தேதி முதல் ஏழு புதிய படங்கள் வெளியாக உள்ளன. டன்க்ரிக், 102 நாட் அவுட், காமிக்ஸ்தான், ட்ரான்ஸ்பார்மர்ஸ் மற்றும் பல வெளியாக உள்ளன. அமேசான் ப்ரைம் மியூசிக் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை எக்கோ டாட்ஸ் வெல்லும் வாய்ப்புகள் உள்ளது.

அமேசான் டிவைஸ்களான பையர் டிவி ஸ்டிக், எக்கோ அகியவை சிறப்பு தள்ளுபடி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், ‘அமேசான் நவ்’ ஆப்பில் 100 ரூபாய் கேஷ் பாக் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement

அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள், தற்போது பெற்று வரும் ஒரு நாள் டெலிவரி, ஆர்டர் செய்த அன்றே டெலிவரி, ப்ரைம் வீடியோ, ப்ரைம் மியூசிக், எக்ஸ்க்ளூசிவ் டீல்ஸ், ப்ரைம் நவ்வின் இரண்டு மணி நேர டெலிவரி ஆகிய வசதிகளை தொடர்ந்து பெறலாம்.

அமெரிக்காவை பொறுத்த வரை, அமேசான் ப்ரைம் தின விற்பனை ஜூலை 16 ஆம் தேதி மாலை 3 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon Prime Day, Prime Day, Amazon, Prime Day 201
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.