சோனி இந்தியாவின் பேக் டூ ஸ்கூல் ஆஃபர்: 999 ரூபாய்க்கு PS4 கேம்கள்

விளம்பரம்
Written by Rishi Alwani மேம்படுத்தப்பட்டது: 21 ஆகஸ்ட் 2018 17:54 IST

ப்ளே ஸ்டேஷன் கேம்ஸ் (PS4) இப்போது சோனி இந்தியாவின் பேக் டூ ஸ்கூல் (Back to School) சலுகையில் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் உள்ள விலையான 1,499 ரூபாயை விட குறைந்த விலைக்குக் கிடைக்கும் என்ற செய்தியைப் பல சில்லரை வணிகர்களும் என்டிடிவியிடம் உறுதி செய்துள்ளனர். எனினும் சில விசயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. முதலில் இரண்டு கேம்களை 1,999 ரூபாய்க்கு வாங்க வேண்டும். இரண்டாவது சோனி இந்தியாவின் பேக் டூ ஸ்கூல் சலுகை ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 30 வரை மட்டுமே. இறுதியாக, எல்லா PS4 கேம்களுக்கும் இச்சலுகை பொருந்தாது; ப்ளேஸ்டேஷன் ஹிட்ஸ் லேபிளில் உள்ள எல்லா கேம்களுக்குமானதும் அல்ல. ஆகவே, நீங்கள் கிராவிட்டி ரஷ் ரீமாஸ்டர்ட், கிராவிட்டி ரஷ் 2 போன்ற கேம்களை தலா 999ரூபாய்க்குப் பெறலாம் என்று நினைத்தால் அது நடக்காது. இச்சலுகையில் கிடைக்கும் கேம்களின் பட்டியல் கீழ்வருமாறு:

999 ரூபாய்க்கு இந்தியாவில் கிடைக்கும் PS4 கேம்கள்

  • ப்ளட்பார்ன் (Bloodborne)
  • டிரைவ்கிளப் (Driveclub)
  • இன்ஃபேமஸ் செகண்ட் சன் (Infamous Second Son)
  • கில்சோன் ஷேடோ ஃபால் (Killzone Shadow Fall)
  • த லாஸ்ட் ஆஃப் அஸ் ரீமாஸ்டர்ட் (The Last of Us Remastered)
  • லிட்டில் பிக் பிளானட் 3 (LittleBigPlanet 3)
  • ராட்ச்சட் & கிளான்க் (Ratchet and Clank)
  • அன்சார்ட்டர்ட் 4: எ தீஃப்ஸ் எண்ட் (Uncharted 4: A Thief’s End)

 

இதில் பல கேம்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் கிடைக்கும் சிறப்பு சலுகையால் மலிவாக கிடைத்து வந்தால், ஒட்டுமொத்தமாக பலரும் கேம்களின் விலையை உயர்த்தும் போக்கில் உள்ள நிலையில் இது வரவேற்கத்தக்க சலுகைதான்.

மேலும் இதில் எத்தனை கேம்கள் உடனடியாகக் கிடைக்கும் என்றும் பார்க்கவேண்டியுள்ளது. சோதித்துப் பார்த்ததில் பல கேம்களும் அமேசானில் 990 ரூபாய்க்கே உடனடியாக வாங்கக் கிடைக்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: PS4, Sony, PlayStation Hits, PS Hits, Game in retail India, Sony India, Cheap PS4 India
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 ப்ரோ கசிவு: அறிமுகத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே மீண்டும் 'டீப் ரெட்' நிறம் குறித்த தகவல்
  2. லுமியோ விஷன் 9 (2026) இந்திய அறிமுகம் குறித்த டீசர் வெளியீடு; அமேசான் விற்பனை உறுதி
  3. சியோமி TV S மினி LED (2026): 55, 65, 75-இன்ச் மாடல்கள் ஏப்ரல் 15 அன்று இந்தியாவில் அறிமுகம்
  4. இந்தியாவில் ரூ. 25,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த லேசர் பிரிண்டர்கள்
  5. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்திய அறிமுகம் நெருங்குகிறது: பிளிப்கார்ட்டில் புதிய டீசர்கள் வெளியீடு
  6. அறிமுகத்திற்கு முன் ஓப்போ Find X9 Ultra வடிவமைப்பு கசிவு; ஹஸல்பார்ட் எர்த் எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் செட் அறிவிப்பு
  7. ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகத் தேதி உறுதி: டிஸ்ப்ளே சிறப்பம்சங்களை வெளியிட்டது நிறுவனம்
  8. விவோ X300 FE ஜெய்ஸ் டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட் உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்: புதிய தகவல் வெளியீடு
  9. ரெட்மி A7 ப்ரோ 5G இந்தியாவில் அறிமுகம்: 32 மெகாபிக்சல் கேமரா, யுனிசோக் T8300 SoC; விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  10. இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ அறிமுகம்: ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 6,500mAh பேட்டரி வசதி கொண்டது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.