Photo Credit: Samsung
Samsung Galaxy Buds 3 விரைவில் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேலக்ஸி வாட்ச் 7 அறிமுகம் ஆகும் போது அன்பேக்ட் நிகழ்வில் Galaxy Buds 3 வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் Galaxy Buds 3 டிஸைன் பற்றிய சில படங்கள் கசிந்துள்ளது. சார்ஜிங் கேஸ் வடிவமைப்பு வேறுவிதமாக உள்ளது. சார்ஜிங் கேஸ் உள்ளே உள்ள பட்கள் வெளியே தெரியும் வகையில் மூடிகள் கண்ணாடி போல உள்ளன. உள்ளே சார்ஜ் ஏறுவது வெளிப்படையாக தெரிகிறது. இது ஆப்பிளின் ஏர்போட்களை ஒத்திருக்கும் என ஊகிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான இந்த போட்டோக்கள் இது வதந்தி என்பதை உறுதி செய்துள்ளது. தென் கொரிய ஈ-காமர்ஸ் வலைத்தளமான கூபாங்கில் கேலக்ஸி பட்ஸ் 3 போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. Galaxy Buds 2 Pro மற்றும் Galaxy Buds FE டிஸைன் போல இல்லாமல் இது வேறு விதமாக இருக்கிறது. Galaxy Buds 3 இயர்பட்கள் கருப்பு நிற முனைகளுடன் உலோக வெள்ளி நிறத்தில் உள்ளது.
அதே சமயம் கேஸ் ஊதா நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டது போல தெரிகிறது. கேஸ் கண்ணாடியால் ஆனது போல வெளிப்படையான மூடியை கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் பச்சை இண்டிகேஷன் லைட் உள்ளது. இது அதன் சார்ஜிங் நிலைகளை காட்டும். சார்ஜிங் கேஸில் பயனர்கள் சார்ஜிங் கேஸை இணைக்க அனுமதிக்கும் கிளிப் இருப்பது போல் தெரிகிறது. கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6, கேலக்ஸி இசட் ஃபிளிப் 6, கேலக்ஸி ரிங், கேலக்ஸி வாட்ச் 7 சீரிஸ் மற்றும் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா ஆகியவற்றுடன் கேலக்ஸி பட்ஸ் 3 அன்பேக் நிகழ்வில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீட்டு விழா ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது .
தென் கொரிய ஈ-காமர்ஸ் வலைத்தளமான கூபாங்கில் கேலக்ஸி பட்ஸ் 3 போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. Galaxy Buds 2 Pro மற்றும் Galaxy Buds FE டிஸைன் போல இல்லாமல் இது வேறு விதமாக இருக்கிறது. Galaxy Buds 3 இயர்பட்கள் கருப்பு நிற முனைகளுடன் உலோக வெள்ளி நிறத்தில் உள்ளது. அதே சமயம் கேஸ் ஊதா நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டது போல தெரிகிறது. கேஸ் கண்ணாடியால் ஆனது போல வெளிப்படையான மூடியை கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் பச்சை இண்டிகேஷன் லைட் உள்ளது. இது அதன் சார்ஜிங் நிலைகளை காட்டும். சார்ஜிங் கேஸில் பயனர்கள் சார்ஜிங் கேஸை இணைக்க அனுமதிக்கும் கிளிப் இருப்பது போல் தெரிகிறது.
கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6, கேலக்ஸி இசட் ஃபிளிப் 6, கேலக்ஸி ரிங், கேலக்ஸி வாட்ச் 7 சீரிஸ் மற்றும் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா ஆகியவற்றுடன் கேலக்ஸி பட்ஸ் 3 அன்பேக் நிகழ்வில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீட்டு விழா ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது .
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்