'இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!' - WhatsApp-ன் இந்த அப்டேட் வேற லெவல்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 23 அக்டோபர் 2019 14:11 IST
ஹைலைட்ஸ்
  • WhatsApp பயனர்கள் அம்சத்தைப் பெற செலியை reinstall செய்து முயற்சிக்கலாம்
  • Settings-ல் ‘My Contacts Except’ ஆப்ஷன்
  • voice message திறனையும் பெறுகிறது WhatsApp Web

Group Privacy Settings-ஐ WhatsApp மாற்றியுள்ளது

Photo Credit: WABetaInfo

இந்திய பயனர்களுக்கான Group Privacy Settings வெளியிட்ட பிறகு, WhatsApp இப்போது மற்ற சந்தைகளிலும் இந்த அம்சத்தை சோதிக்கத் தொடங்கியது. இந்த அம்சம் WhatsApp Messenger-ன் சமீபத்திய Android மற்றும் iOS பீட்டாவில் காணப்பட்டது. மேலும், இது ஒரு சிறிய மாற்றமாகவும் உள்ளது. Group Privacy Settings-ல் முன்னர் கிடைத்த Nobody ஆப்ஷனுக்கு பதிலாக - எந்தவொரு பயனரும் உங்களை அனுமதியின்றி ஒரு குழுவில் சேர்க்க முடியாது. மேலும், புதிய Blacklist option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனித்தனியாக, செயலியின் desktop பதிப்பிலும் தொடர்ச்சியாக குரல் செய்திகளைக் கேட்கும் திறனையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட Group Privacy Settings-ல் தொடங்கி, iOS பீட்டா பதிப்பு 2.19.110.20 மற்றும் Android பீட்டா பதிப்பு 2.19.298 ஆகியவற்றில் இந்த அம்சத்தை செயல்படுத்துவதோடு வாட்ஸ்அப் கண்காணிக்கும் என்று WhatsApp tracker WABetaInfo தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்படாத புதிய Blacklist அம்சம் இதில் அடங்கும். சமீபத்திய பதிப்புகளை புதுப்பித்த பிறகும் நீங்கள் அந்த அம்சத்தைக் பார்க்கமுடியாமல் போகலாம். chat history-ஐ பேக்கப் செய்யவும், சமீபத்திய உள்ளமைவுகளைப் பெற வாட்ஸ்அப்பை reinstalling செய்யவும் மற்றும் அம்சத்தை செயல்படுத்தவும் tracker பரிந்துரைக்கிறது.

WhatsApp Settings > Account > Privacy > Groups-ற்கு சென்று புதிய ஆப்ஷனை பார்க்கவும். மூன்று ஆப்ஷன்களில் Everyone, My Contacts மற்றும் My Contacts Except ஆகியவற்றை காணலாம். இந்த அம்சம் முதன்முதலில் உருவானபோது, ​​My Contacts Except option- னுக்கு பதிலாக Nobody option இருந்தது. உங்களை ஒரு குழுவில் சேர்ப்பதற்கு முன், ஒப்புதல் பெற வேண்டிய பயனர்களைத் தேர்ந்தெடுக்க, இந்த புதிய ஆப்ஷன் உங்களை அனுமதிக்கும். நீங்கள் ஒரு சில பயனர்களைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது முழு தொடர்பு பட்டியலையும் சேர்க்க Select All ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

உங்கள் தொலைபேசியில் புதிய தொடர்புகளைச் சேர்ப்பது, கூடுதல் நபரை நீங்களே பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று WABetaInfo குறிப்பிடுகிறது. Contacts option-ல் உள்ள address book-ல் உள்ள பயனர்களை உங்களை குழுக்களில் சேர்க்க உதவும். மேலும், Everyone option-ல் எந்த தடையும் இருக்காது. 

குறிப்பிட்டுள்ளபடி, WhatsApp Web-ஐ தொடர்ந்து குரல் செய்திகளைக் கேட்கும் திறனையும் பெறுகிறது என்று WABetaInfo தெரிவித்துள்ளது. இந்த தொடர்ச்சியான குரல் செய்திகள் அம்சம் மார்ச் மாதம் Android-ல் காணப்பட்டது. இப்போது Web version-னிலும் வந்துவிட்டது. பெயர் குறிப்பிடுவது போல, இந்த அம்சம் ஒன்றன் பின் ஒன்றாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குரல் செய்திகளை அனுப்ப auto-playing-ஐ அனுமதிக்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 15: Pre-Booking இன்று துவக்கம்; 7000mAh Battery உடன் நவம்பர் 26 அறிமுகம்
  2. இந்தியாவின் புது கிங்! Lava Agni 4 லான்ச்! ₹22,999-க்கு இந்த போனை வாங்கலாமா?
  3. Wobble One: Dimensity 7400, 120Hz AMOLED Display உடன் ரூ.22,000-க்கு அறிமுகம்
  4. Vivo-ன் போட்டோகிராபி கிங்! X300 Pro-க்கு ₹1,09,999 விலையா? விலை ஏறுனதுக்கு என்ன காரணம்?
  5. Redmi K90 Ultra: 165Hz Display, 8000mAh Battery உடன் அம்சங்கள் லீக்
  6. TRAI: SMS Variables-க்கு Pre-tagging கட்டாயம்; Phishing & Misuse தடுக்கும் புதிய விதி
  7. Qualcomm: Snapdragon 8 Gen 5 சிப்செட் நவம்பர் 26 அன்று சீனாவில் அறிமுகம்
  8. Realme 15 Lite 5G: Dimensity 8000 & 120Hz AMOLED உடன் Amazon-ல் விரைவில்!
  9. Jio: அனைத்து 5G Unlimited Subscribers-க்கும் Gemini 3 AI Pro திட்டம் 18 மாதங்கள் இலவசம்
  10. AppleCare+: Theft and Loss Protection உடன் புதிய சலுகைகள் இந்தியாவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.