மீண்டும் ஒரு அப்டேட்டை வெளியிட்டது வாட்ஸ்-அப்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 9 ஜூன் 2018 13:29 IST
ஹைலைட்ஸ்
  • ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக வாட்ஸ்-அப் செயல்பட்டு வருகிறது
  • பலப் புதிய அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது
  • ஃபார்வர்டட் மெசேஜ்' லேபல் அறிமுகம்

இந்திய அளவில் சாட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்-அப்பிற்கு தனி இடம் உள்ளது. முதலில் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் வாட்ஸ்-அப் செயலியை வடிவமைத்து வெளியிட்டது. குறைந்த காலத்தில் இதன் பிரமாண்ட வீச்சைப் பார்த்த ஃபேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்-அப்பை ஒரே செக்கில் தன் வசம் ஆக்கியது. தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக வாட்ஸ்-அப் செயல்பட்டு வருகிறது.

வாட்ஸ்-அப் செயலி, ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் சென்றதில் இருந்து பலப் புதிய அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்-அப் செயலிக்கு புதிய அப்டேட் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய அப்டேட்டின் மூலம், 'ஃபார்வர்டட் மெசேஜ்' லேபல், அனுப்பும் தகவலுக்கு மேல் வரும். ஒருவர் அனுப்பிய செய்தியை மற்றவருக்கு அப்படியே அனுப்பினால் அதுதான் ஃபார்வர்டட் மெசேஜ். இப்படி அனுப்பும் தகவல்களுக்கு மேலேதான், ஃபார்வர்டட் மெஸேஜ் என்ற லேபல் வந்துவிடும். இதன் மூலம் எது நாம் மற்றவர்களிடமிருந்து அனுப்புவது, எது நாம் சுயமாக எழுதி அனுப்புவது என்று பகுப்பாய்ந்து கொள்ள முடியும். இதில் ஒரு சின்ன பின்னடைவும் இருக்கிறது. இந்த அப்டேட்டை தரவிறக்கம் செய்த பின்னர், 'ஃபார்வர்டட் மெஸேஜ்' லேபல் வேண்டாம் என்று முடிவெடுத்தாலும், அதை போக்குவதற்கு அமைப்புகளில் வழி இல்லை.

சிறிது காலத்துக்கு முன்னர் தான், வாட்ஸ்-அப் நிறுவனம், 'மீடியா விசிபிலிட்டி ஃபீச்சர்'-யைப் பார்க்க அல்ல மறைக்க ஏதுவாக ஒரு அப்டேட்டை வெளியிட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அப்டேட்-ஐ வாட்ஸ்-அப் ரிலீஸ் செய்துள்ளது.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp for Android
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. லாவா போல்ட் என்2 5ஜி 6,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  2. புதிய அம்சத்தால் இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது புரொஃபைல் கிரிட்டை இனி விருப்பம்போல மறுவரிசைப்படுத்தலாம்
  3. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் பல-கணக்கு ஆதரவு (Multi-Account Support) கூடுதல் பயனர்களுக்கு வழங்கப்படுவதாகத் தகவல்
  4. WWDC 2026: iOS 27 வெளியீட்டுத் தேதி, அப்டேட் செய்யும் முறை மற்றும் ஆதரவுள்ள சாதனங்களின் பட்டியல்
  5. WWDC 2026: முக்கிய ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் மேம்பாடுகளுடன் கூடிய சிரி AI-ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது
  6. WWDC 2026: ஜெமினி AI மூலம் இயங்கும் புதிய சிரி அம்சங்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
  7. அமேசான் மெகா டீல்ஸ்: விவோ X300 FE, ஒன்பிளஸ் நோர்ட் CE 6 மற்றும் முக்கிய கேஜெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடி!
  8. ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்: ஒன்பிளஸ் 15, நோர்ட் 6, பேட் 4 மற்றும் பல தயாரிப்புகளுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு
  9. இந்தியாவில் சியோமி பேட் 8 இன் விலை உயர்ந்தது: இப்போது அதன் விலை எவ்வளவு என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
  10. இந்தியாவில் வாங்குபவர்களின் முடிவுகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக மெட்டா ஆய்வு கூறுகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.