டிசம்பர் 31-க்குப் பிறகு இந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது..!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 8 மே 2019 16:01 IST
ஹைலைட்ஸ்
  • அப்டேட் பெற உள்ளது வாட்ஸ்அப்
  • டிசம்பர் 31 வரை விண்டோஸ் போன்பகளுக்குப் பிரச்னை இல்லை
  • வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக புதிய செயலி வெளியிடப்பட வாய்ப்புள்ளது

அதே நேரத்தில் விண்டோஸ் போன்களுக்கென்று பிரத்யேகமான UWP என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் எனப்படுகிறது

வாட்ஸ்அப் நிறுவனம், தனது மென்பொருளை அப்டேட் செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனால், 2019, டிசம்பர் 31 ஆம் தேதி முதல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் சார்பில் வெளிவந்துள்ள அனைத்து போன்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விண்டோஸ் போன்களுக்கென்று பிரத்யேகமான UWP என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் எனப்படுகிறது. இந்த புதிய செயலி விண்டோஸ் டெஸ்க்டாப் மற்றும் விண்டோஸ் போன்களில் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், ‘விண்டோஸ் மொபைல் போன்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சப்போர்ட் கொடுத்து வருவதை நிறுத்த உள்ளது. இதையொட்டி, விண்டோஸ் போன்களுக்கான கடைசி வாட்ஸ்அப் அப்டேட் வரும் ஜூன் மாதம் விடப்படும். இந்த ஆண்டு இறுதிவரை, விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யும்' என்று குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

விண்டோஸ் போன் 7-ல், வாட்ஸ்அப் 2016 முதலே வேலை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல ஆண்ட்ராய்டு (v2.3.7 மற்றும் பழைய வகைகள்) மற்றும் iOS (iOS 7 மற்றும் பழைய வகைகள்) போன்களில் 2020, பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் வாட்ஸ்அப் செயலி இயங்குவது நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக UWP செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும், லேட்டஸ்ட் விண்டோஸ் போன்களில் இந்த செயலி வேலை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வராததால், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp for Windows Phone, Windows Phone, UWP

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.