Whatsapp Update: வாட்ஸ்அப்பில் நீங்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த அசத்தல் அப்டேட்!!!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 1 ஆகஸ்ட் 2020 15:19 IST
ஹைலைட்ஸ்
  • WhatsApp beta for Android v2.20.197.3 suggests Mute Always option
  • It seems to let you mute a chat or group notifications forever
  • WhatsApp is also likely to bring self-destructing messages soon

வாட்ஸ்அப் நோட்டிபிகேஷனை 1 வருடம் வரையில் மியூட் செய்யும் வசதி தற்போது உள்ளது

வாட்ஸ்அப்பில் நோட்டிபிக்ஷேனை நிரந்தரமாக மியூட் செய்தல், மெசேஜ் எக்ஸ்பைரி உள்ளிட்ட அம்சங்கள்  வரவுள்ளன.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஓர் அங்கமான வாட்ஸ்அப்பில் வாடிக்கையார்களின் வசதிக்கேற்ப புதிய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது தனிநபர் மெசேஜ் மற்றும் குரூப் மெசேஜ் சாட்டில் இரண்டு வசதிகளை கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதன்படி, நோட்டிபிக்கேஷன் பகுதியில் 'Mute Always' என்ற ஆப்ஷன் கொண்டு வரப்படுகிறது. இதுவரையில் ஒரு தனிநபர் சாட் அல்லது குரூப் சாட்டில் மியூட் நோட்டிபிகேஷனில் அதிகபட்சமாக ஒரு வருடத்துக்கு மட்டும் மியூட் செய்யும் வகையில் இருந்தது. இனி ஆயுட்காலம் முழுவதும் அந்த குரூப்பில் இருந்து, குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து வரும் நோட்டிபிகேஷனை முடக்கலாம்.

இதே போல் மெசேஜ் எக்ஸ்பைரி என்ற ஆப்ஷனும் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, ஒரு மெசேஜை அனுப்பும் போது குறிப்பிட்ட நாள், நேரத்தை செட் செய்து கொள்ளலாம்.  நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அந்த மெசேஜ் தானாக டெலிட் ஆகிவிடும். இதற்கு முன்பு இமெயிலில் இந்த வசதி இருந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப்பிலும் இது கொண்டு வரப்படுகிறது. 

மேற்கண்ட இரண்டு அம்சங்களும் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (version 2.20.197.3) சோதனை செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இது அனைத்து வாட்ஸ்அப்களிலும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. 
 

ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப், இந்த புதிய அப்டேட்களை சோதனை செய்து வருகிறது.
Photo Credit: WABetaInfo

மேற்கண்ட இரண்டு அம்சங்களும் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (version 2.20.197.3)சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன. 

 

வாட்ஸ்அப் மெசேஜ் 7 நாளில் எக்ஸ்பைரி ஆகும் வகையிலான அம்சங்கள் கொண்டு வரப்படுகிறது
Photo Credit: WABetaInfo


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp for Android, WhatsApp, Android Beta, Android beta users
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  2. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  3. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  4. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  5. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  6. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  8. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  9. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  10. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.