ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் டார்க் மோடை எப்படி வைப்பது...? 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 9 மார்ச் 2020 12:49 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப் டார்க் மோட் இப்போது ஆண்ட்ராய்டு, ஐபோனில் வெளிவருகிறது
  • ஆண்ட்ராய்டு 10 பயனர்கள் வாட்ஸ்அப் டார்க் மோடை மேனுவலாக இயக்க முடியும்
  • iOS 13 இல்லாத ஐபோன் பயனர்கள் வாட்ஸ்அப் டார்க் மோடை அனுபவிக்க முடியாது

வாட்ஸ்அப் டார்க் மோடை ஆண்ட்ராய்டில் மேனுவாலாக இயக்க முடியும், ஆனால் ஐபோனில் அல்ல

வாட்ஸ்அப் இறுதியாக டார்க் மோட் அம்சத்தையும் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுமார் ஒரு வருடமாக சோதனை கட்டத்தில் இருந்தது. இப்போது பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து சமீபத்திய வாட்ஸ்அப் மெசஞ்சர் அப்டேட்டை பதிவிறக்கம் செய்து புதிய அம்சத்தைப் பெறலாம். ஆண்ட்ராய்டு 10-ல் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களும், iOS 13-ல் ஐபோன் பயனர்களும் தங்கள் system settings-ல் டார்க் மோடை இயக்குவதன் மூலம் வாட்ஸ்அப் டார்க் மோடை பெறலாம்.


வாட்ஸ்அப் டார்க் மோட்: ஆண்ட்ராய்டில் இதை எவ்வாறு இயக்குவது: 

  1. முதலில், வாட்ஸ்அப்பின் (2.20.64) சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய உங்கள் போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோருக்குச் செல்லுங்கள்.
  2. புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் பதிப்பு இன்ஸ்டால் செய்ததும், மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று-புள்ளி மெனு ஐகானைத் தட்டி Settings-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பின்னர், chat settings-க்குச் செல்ல Chats-ஐத் தட்டவும்.
  4. அடுத்து, Theme மீது தட்டவும், இது செயலியின் தீம்-ஐ தேர்வுசெய்ய உங்களுக்கு ஒரு ஆப்ஷனை வழங்கும்.
  5. Dark-ஐ தட்டவும், வாட்ஸ்அப் டார்க் மோடைப் பயன்படுத்த உங்கள் எல்லாவற்றையும் செட் செய்யவும்.

Theme-ஐ தட்டும்போது System default ஆப்ஷனையும் நீங்கள் காண்பீர்கள், இது default system settings-ன்படி தானாகவே லைட் மற்றும் டார்க் மோடில் மாறுகிறது.

இந்த கையேடு முறை iOS 13 பயனர்களுக்கு கிடைக்கவில்லை. மேலும், iOS 13 இல்லாத ஐபோன் பயனர்கள் வாட்ஸ்அப்பின் டார்க் மோடை அனுபவிக்க முடியாது.


வாட்ஸ்அப் டார்க் போட்: ஐபோனில் இதை எவ்வாறு இயக்குவது:

  1. உங்கள் ஐபோனில் உள்ள ஆப் ஸ்டோரைப் பார்வையிடவும், வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கவும் (2.20.30).
  2. அடுத்து, போனில் உள்ள Settings-க்குச் சென்று Display & Brightness ஆப்ஷனை கண்டறியவும்.
  3. system wide டார்க் மோடை இயக்க Dark-ல் தட்டவும்.
  4. மாற்றாக, நீங்கள் Control Centre-க்குச் சென்று Dark Mode-ல் தட்டலாம்.

வாட்ஸ்அப் குழு இந்த அப்டேட்டின் விவரங்களை தங்கள் வலைப்பதிவில் (blog) பகிர்ந்து கொண்டது, அங்கு டார்க் மோடை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவது வாசிப்புத்திறன் மற்றும் தகவல் வரிசைமுறை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். படிக்கக்கூடிய வகையில், iOS மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரு தளங்களிலும் system defaults-க்கு நெருக்கமான வண்ணங்களைப் பயன்படுத்துவதாகும். தகவல் வரிசைக்கு, பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்பு கூறுகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது “மிக முக்கியமான தகவல்கள் தனித்து நிற்கின்றன என்பதை உறுதிப்படுத்த.”

டார்க் மோட் அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் மெதுவாக வெளிவருகிறது, மேலும் அனைவரையும் அடைய சில நாட்கள் ஆகும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp for Android, WhatsApp for iPhone, WhatsApp messenger, WhatsApp
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  2. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  3. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  4. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  5. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  6. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  7. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  8. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  9. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  10. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.