அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் ஒரே ஆப்: ‘கூகுள் பே செண்ட் ‘ புதிய அப்டேட்

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 11 ஜூலை 2018 17:37 IST
ஹைலைட்ஸ்
  • கூகுள் பே செண்ட் அம்சம் கூகுள் 'பே'வில் இணைக்கப்பட்டுள்ளது
  • பயணம், சினிமா மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டை புக் செய்யலாம்
  • டெஸ்க்டாப்பிலும் இந்த பே செயலியை பயன்படுத்தலாம்

கூகுளின் டிஜிட்டல் பேமென்ட் ஆப்பான ‘கூகுள் பே’ ஆப்பில் புதியதாக ‘பே செண்ட்’ என்ற வசதியை இணைத்துள்ளது அந்நிறுவனம். இதுவரை பல்வேறு வகையான கட்டணங்களை செலுத்த மட்டுமே முடியும் என்றிருந்த இந்த ஆப்பில், இப்போது நண்பர்களுக்கு பணம் அனுப்பவும், பணம் பெறவும் முடியும் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அது மட்டும் இல்லாமல், பயண டிக்கெட்கள், சினிமா டிக்கெட்கள் மற்ற நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்களை இந்த ஆப் மூலமே வாங்கவும், அந்த டிக்கெட்களை டிஜிட்டல் பாஸாகவும் சேமித்து வைக்கவும் முடியும்.

டிக்கெட்கள் வாங்கும் போது கூப்பன்களும், கிஃப்ட் கார்டுகளும் பரிசாக வழங்கப்படுகின்றன. மொபைல் எண் மூலம் கூகுள் ‘பே’வில் கணக்கு தொடங்கலாம். “ மொபைலில் மட்டும் அல்ல, டெஸ்க்டாப்பிலும் கூகுள் ‘பே’ பயன்படுத்தும் வசதியை ஏற்ப்படுத்தி இருக்கிறோம். ஐ.ஓ.எஸ்ஸிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வணிக நிறுவனங்கள், டிக்கெட் புக்கிங், பணம் அனுப்பவும், பெறவும் என பல வகையில் கூகுள் பே ஆப்பை பயன்படுத்தலாம்” கூகுள் பேமென்ட்ஸின் இயக்குநர் ஜெரார்டோ கேப்பில்.

டெஸ்க்டாப்புக்கு ஏற்ற வகையில் பாஸ்களை சேமித்து வைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும், கட்டணம் செலுத்தும் போது சிறப்பு ஆஃபர்கள் வழங்கப்படுவதால், பணமும் மிச்சமாகிறது. மொத்தத்தில் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஒரே ஆப் என்ற நோக்கில் கூகுள் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.

இந்த அப்டேட் தற்போது, அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக ஐக்கிய நாடுகளிலும், பின் உலகம் முழுவதும் கொண்டு வரப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Google Pay
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 தொடர் விவரங்கள் கசிந்தன; புரோ மேக்ஸ் மாடலில் டைமன்சிட்டி 9600 புரோ சிப்செட் இடம்பெறலாம்!
  2. டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5G டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  3. 150W சவுண்ட் மற்றும் 4 EQ மோட்களுடன் போர்ட்ரானிக்ஸ் பியூர் சவுண்ட் புரோ X2 ஹோம் தியேட்டர் இந்தியாவில் அறிமுகம்
  4. ஷியோமி பவர் பேங்க் 5i 20000mAh இந்திய அறிமுக தேதி உறுதி; முக்கிய அம்சங்கள், விவரங்கள் வெளியீடு!
  5. 9-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டத்துடன் மோட்டோ பேட் 70 குரூவ் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!
  6. சாம்சங் 'பேக் டூ ஸ்கூல்' விற்பனை: கேலக்ஸி S26, டேப் S11 அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
  7. கூகுளின் ஃபிட்பிட் ஏர் (Fitbit Air) அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக அமேசான் இந்தியாவில் கண்டறியப்பட்டது
  8. ரெட்மி நோட் 17 இந்திய அறிமுக தேதி கசிந்தது; முக்கிய அம்சங்களை டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார்!
  9. பெரிய பேட்டரியுடன் விரைவில் ஷியோமி பேட் 9 அறிமுகமாகலாம்; கசிந்த முக்கிய அம்சங்கள்!
  10. சாம்சங் கேலக்ஸி A55, A35 மாடல்களில் ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஒன் UI 9 சோதனை பதிப்புகள் கண்டறியப்பட்டன!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.